ஒட்டுநிலை மொழி
ஒட்டுநிலை மொழி (Agglutinative language) என்பது, உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட மொழியைக் குறிக்கும். 1836 ஆம் ஆண்டில் உருபனியல் நோக்கில் மொழிகளை வகைப்பாடு செய்ய முயன்றபோது வில்கெல்ம் ஃபொன் கும்போல்டு (Wilhelm von Humboldt) என்பார் இந்தக் கருத்துருவை உருவாக்கினார்.[1][2][3]
ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்புநிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்புநிலை மொழிகளில் ஒவ்வொரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. அத்துடன், இதன் முக்கியமான ஒரு இயல்பாக, ஒட்டுநிலை மொழிகளில் ஒட்டுக்கள் பிற ஒட்டுக்களுடன் இரண்டறக் கலந்து விடுவதில்லை என்பதுடன், பிற ஒட்டுக்களின் தாக்கத்தால் தமது வடிவத்தையும் மாற்றிக்கொள்வதில்லை.
ஒட்டுநிலை மொழிகள் அல்லாத பிற பிணைப்புநிலை மொழிகள், இணைவுநிலை மொழிகள் (fusional languages)எனப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Stocking, George W. (1995). The Ethnographer's Magic and Other Essays in the History of Anthropology. University of Wisconsin Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-299-13414-8.
- ↑ Mouche, Ryan; Renfro, Ashley; Lance, Marshall (May 15, 2019). "Persian Syntax". Scholars Week. https://cedar.wwu.edu/scholwk/2019/2019_poster_presentations/57/.
- ↑ Shaw, Ian; Jameson, Robert (2002-05-06). A Dictionary of Archaeology (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780631235835.