ஒண்டிப்புதூர் நீலகண்டேசுவரர் கோயில்

ஒண்டிப்புதூர் நீலகண்டேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருகூர் அருகே ஒண்டிப்புதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு ஆகியவற்றின் மூலமாக இருகூரின் பெருமையை அறியமுடிகிறது. சங்க காலத்தில் இவ்வூர் பொன்னூர், மண்ணூர் என்று இருந்ததாகவும் பின்னர் இருகூர் என்றானதாகவும் கூறுவர். இருளர் தலைவன் இருவன் பெயரில் இருகூர் என்று ஆனதாகவும் கூறுவர். [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 401 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°00'05.3"N, 77°04'02.4"E (அதாவது, 11.018140°N, 77.067328°E) ஆகும்.

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக நீலகண்டேசுவரர், சௌந்தரேசுவரர் ஆவார். இறைவி சுயம்வர பார்வதி தேவி, மீனாட்சி அம்மன் ஆவார். சூரசம்காரம், தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]

அமைப்பு தொகு

மூலவர் மீது மாலைப்பொழுதில் சூரிய ஒளி விழும் காட்சியைக் காணலாம். மூலவர், இறைவி, ஞான தண்டாயுதபாணி ஆகியோர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளனர். சௌந்தரேசுவர், மீனாட்சி அம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கி உள்ளனர். மூலவரின் இடது புறம் பார்வதி உள்ளார். வலப்பக்கத்தில் ஞான தண்டாயுதபாணி காணப்படுகிறார். பிரம்மா அமர்ந்த நிலையில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேசுவர லிங்கம் உள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு