ஒண்டிவீரன்

ஒண்டிவீரன் வீர மரணம் அடைந்தது சேலம் மாவட்டம் சங்ககிரி ஒருக்காமலை. ஒண்டிவீரனுக்கு நினைவிடம் ந

ஒண்டிவீரன் (Ondiveeran)(இறப்பு:1771) என்பவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். அருந்ததியர் பிரிவைச்சார்ந்த முதல் விடுதலைப்போராட்ட வீரர் ஆவார்.[1][2]

ஒண்டிவீரன்
பிறப்புதிருநெல்வேலி , பிரித்தானியா இந்தியா
இறப்பு20 ஆகத்து 1771
தேசியம்இந்தியன்
பணிபோராட்ட வீரர்

புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட பொட்டி பகடை மற்றும் கருப்பன் பகடை போன்றோறும் இவருடன் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர். ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார். ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால் இவர் ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார். இவர் பல போர்களில் வெற்றி கண்டுள்ளார் என்பதை வரலாறு கூறுகிறது.

சர்ச்சைகள்

தொகு

ஆசு என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் வாஞ்சிநாதன் தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும் பஞ்சமன்" [சான்று தேவை] என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் பஞ்சமன் என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட வென்னி காலாடி, ஒண்டி வீரன், கந்தன் பகடை, பொட்டி பகடை, சுந்தரலிங்கம், கட்டன கருப்பணன் போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் என அ. மார்க்சு, அழகிய பெரியவன், ஏ.பி. வள்ளிநாயகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

போர் வெற்றி

தொகு

1767ஆம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார்.

மணிமண்டபம்

தொகு

2000ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒண்டிவீரனின் சமூகஇனத்தவர்கள் தங்கள் சார்ந்த வீரனுக்கு ஒரு நினைவுமண்டபம் கட்டவேன்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். இதன் காரணமாக 2011ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதியின் மூலம் 49 லட்சம் ஒதுக்கப்பட்டது.[3] பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.[3][4]ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆதாரம்

தொகு
  • அழகிய பெரியவன் தலித் முரசில் எழுதிய கட்டுரை.
  • இம்மானுவேல் தேவேந்திரர்- தமிழவேள்
  • கொலைகள வாக்கு மூலங்கள்- அருணன்- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Special Correspondent. "'Garden of Classical Tamil' work to be taken up soon". The Hindu.
  2. "The Fire Against Untouchability". google.com.
  3. 3.0 3.1 Staff Reporter. "Foundation stone laid for memorial". The Hindu.
  4. "பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் மணிமண்டபம் - தரமணியில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சி கூடம்: ஜெயலலிதா திறந்துவைத்தார்". Archived from the original on 2016-03-02. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டிவீரன்&oldid=3772913" இலிருந்து மீள்விக்கப்பட்டது