ஒன்-நார்த் தொடருந்து நிலையம்
ஒன்-நார்த் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் ஒன்-நார்த் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது. வட்டப்பாதை வழித்தடத்தில் இது இருபத்தி இரண்டாவது தொடருந்து நிலையமாகும். இது கெண்ட் ரிஜ் தொடருந்து நிலையம் மற்றும் புவன விஸ்தா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் டோபி காட் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Land Transport DataMall". Datamall. Land Transport Authority. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
- ↑ "FINALISED NAMES FOR CIRCLE LINE (CCL) STAGES 4&5 STATIONS". www.lta.gov.sg. Archived from the original on 18 December 2006.
- ↑ "Station Names For Circle Line Stages 4 And 5". www.lta.gov.sg. 7 November 2005. Archived from the original on 23 Apr 2010.