ஒப்பன
ஒரு வகை நடனம்
ஒப்பன (மலையாளம்:ഒപ്പന) அல்லது ஒப்பனைப் பாட்டு என்பது கேரளத்தின் இசுலாமிய மாப்பிளா சமுதாயத்தினரின் ஒரு கலைவடிவம். திருமண நற்சடங்குகளின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது. மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய வடகேரளப் பகுதிகளில் இக்கலை பெரிதும் பேணப்படுகிறது.
கலை விவரம்
தொகுதிருமணத்திற்கு முன்னர் நல்லாடை, நல்லணிகலன்கள் உடுத்திய மணப்பெண்ணை நடுவில் அமரவைத்து அவளது தோழியர் பத்துப் பதினைந்து பேர் வட்டமாய்க் கூடி ஒப்பனைப் பாட்டுப் பாடுவர். அரபி நாடோடிப் பாட்டின் தாளத்தில் கைகொட்டி மலையாள மொழியில் பாட்டிசைக்கப்படும். மணமக்களின் குணநலன்கள் பாட்டில் பாடப்படும். அல்லாவின் புகழ் தவறாது நினைக்கப்படும்.
ஒப்பனைப்பாட்டு பொதுவாக பெண்களால் பாடப்பட்டாலும் ஆடவர் ஒப்பனைப்பாட்டும் உண்டு. பள்ளி கல்லூரி ஆண்டு விழாக்களில் மலபாருக்கு வெளியேயும் தற்சமயம் ஒப்பனைப்பாட்டு பாடப்படுகிறது.