ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருகுடம் தண்ணி ஊத்தி சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.
விளையாட்டு முறை
தொகுஇருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.
உரையாட்டு நிகழும்.
பிடித்தவரை விட்டுவிடுவர்.
கூட்டுப்பாடல்:
- ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
- இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
- ---
- பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)
அடுத்து விடுபடும் பாடல்
- இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
- இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
- இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
அளவு காட்டும் படம் பார்க்க.
விடுவித்துக் கொள்ளும் உரையாடல்
பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
- உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
- அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)
பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
- உன் புருசன் பெயர் என்ன என்பர்.
- அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
- இ.ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.