பூப்பூ புளியம்பூ

பூப்பூ புளியம்பூ என்பது சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று.

பூப்பூ புளியம்பூ விளையாட்டில் நுழைந்து செல்வதைக் காட்டும் கோட்டுருப் படம்

இது ஒருகுடம் தண்ணி ஊத்தி விளையாட்டைப் போல விளையாடப்படும். பாடல் வேறு. ஒருகுடம் தண்ணி ஊத்தி விளையாட்டில் சிறுவர் சிறுமியர் இருபாலாரும் கலந்துகொள்வர். பாப்பூ புளியம்பூ விளையாட்டில் சிறுமியர் மட்டும் இடம் பெறுவர்.

விளையாடும்போது பாடும் பாடல்

தொகு

பூப்பூ புளியம்பூ
பூத்துக் கிடக்கும் தாழம்பூ (நுழைந்து சுற்றிவரும்போது)

(உள்ளே பிடித்துக்கொண்டபோது நிகழும் உரையாடல்)

பிள்ளையை எதற்குப் பிடித்தாய்
மண்ணை மிதித்தது
மண்ணுக்கு மண் தாரேன்
வேண்டாம் வேண்டாம்
மண்ணுக்குப் பொன் தாரேன்
வேண்டாம் வேண்டாம்
மாமன் மகனைக் கட்டிக்கச் சொல்கிறேன்
சரி சரி (விட்டுவிடுவர்)

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூப்பூ_புளியம்பூ&oldid=1017335" இலிருந்து மீள்விக்கப்பட்டது