ஒருபடித்தான வினைவேக மாற்றம்

வினைபடு பொருள்களும் வினைவேகமாற்றியும் ஒரே நிலைமையில் உள்ள வினைவேக மாற்ற வினைகல் ஒருபடித்தான வினைவேக மாற்றம் எனப்படும். இச்செயல்முறையே ஒருபடித்தான வினைவேக மாற்றம் (Homogeneous catalysis) எனப்படும். ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு.

1. காரீயக் கலன் (Lead Chamber) முறையில் கந்தக டை ஆக்சைடு ஆனது ஆக்சிசனுடன் இணைந்து கந்தக டிரை ஆக்சைடாக நைட்ரிக் ஆக்சைடு வினைவேகமாற்றி முன்னிலையில் ஆக்சிசனேற்றம் அடைதல்.

SO2 (வாயு) + O2 (வாயு) is in equilibrium with 2 SO3

மேற்கண்ட வினையில் வினைபடு பொருள்கள் இரண்டும் வாயு நிலைமையில் உள்ளன. மேலும் இதற்குப் பயன்படுத்தபடும் வினைவேகமாற்றியான நைட்ரிக் ஆக்சைடும் வாயு நிலைமையிலேயே இருக்கிறது. எனவே இது ஓர் ஒருபடித்தான வினைவேக மாற்ற வினையாகும்.

2. ஹைட்ரோ குளோரிக் அமிலத்திலுள்ள H+ அயனிகளின் முன்னிலையில் மெத்தில் அசிட்டேட் நீராற்பகுப்படைதல்.

CH3COOCH3 (திரவம்) + H2O (திரவம்) is in equilibrium with CH3COOH + CHOH

மேற்கண்ட வினையில் வினைபடு பொருள்கள் இரண்டும் திரவ நிலைமையில் உள்ளன. மேலும் இதற்குப் பயன்படுத்தப்படும் வினைவேகமாற்றியான ஹைட்ரோ குளோரிக் அமிலமும் (HCl) திரவ நிலைமையிலேயே இருக்கிறது. எனவே இது ஓர் ஒருபடித்தான வினைவேக மாற்ற வினையாகும்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம்