ஒரு பக்க - மறு பக்க மாற்றியம்

ஒருபக்க - எதிர்ப் பக்க மாற்றியம் (Cis–trans isomerism) என்பது கரிம வேதியியலில் வடிவ மாற்றியம், அமைப்பு மாற்றியம் மற்றும் சிஸ்-டிரான்சு மாற்றியம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சிஸ் மற்றும் டிரான்ஸ் என்பவை இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களாகும். சிஸ் என்ற முன்னொட்டு வேதியியலில் வேதி வினைக்குழுக்கள் கார்பன் சங்கிலியின் ஒரே பக்கத்தில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிக்கிறது. எனவே இதனை ஒருபக்க மாற்றியம் என்கிறார்கள். அதேபோல டிரான்ஸ் என்ற முன்னொட்டு வேதி வினைக்குழுக்கள் கார்பன் சங்கிலியின் எதிர் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிக்கிறது. இத்தகைய மாற்றியத்தை எதிர்ப்பக்க மாற்றியம் என்கிறார்கள்[1].

சிஸ் -பியூட்-2-யீன்
டிரான்ஸ்-பியூட்-2-யீன்

மேற்கோள்கள் தொகு