ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need?) (உருசியம்: Много ли человеку земли нужно?, மினோகோ லி செலோவேகு செம்லி நுசுனோ?) என்பது 1886ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதையாகும்.
"ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?" | |
---|---|
"ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?" கதையின் ஒரு ஓவியம், ஆண்டு 1914 | |
ஆசிரியர் | லியோ டால்ஸ்டாய் |
தொடக்கத் தலைப்பு | "Много ли человеку земли нужно?" |
நாடு | உருசியா |
மொழி | உருசியம் |
வகை(கள்) | சிறுகதை |
வெளியிட்ட நாள் | 1886 |
கதைச் சுருக்கம்
தொகுஇந்தக் கதையின் முதன்மைப் பாத்திரம் பகோம் என்ற பெயருடைய ஒரு விவசாயி ஆவார். பட்டணத்தின் சிறப்புகள் மற்றும் விவசாய வாழ்வு குறித்து தன்னுடைய மனைவியும், மைத்துனியும் விவாதம் செய்வதை இவர் தொலைவிலிருந்து கேட்கிறார். "என்னிடம் ஏராளமான நிலம் இருந்தால் சாத்தனுக்கு கூட நான் பயப்பட தேவையில்லை!" என்று தனக்குத் தானே எண்ணுகிறார். இவருக்கு தெரியாமல் சாத்தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
எனினும், பகோம் பிறகு தன்னுடைய நிலத்தின் மீது அதிகப் பற்றுக் கொள்கிறார். இதன் காரணமாக இவருடைய அண்டையவர்களுடன் வாக்கு வாதங்கள் ஏற்படுகின்றன. "இவருடைய கட்டடத்தை எரித்து விடுவதாக எச்சரிக்கைகள் விடப்படுகின்றன". மற்றொரு பகுதியில் உள்ள ஒரு பெரிய நிலப்பகுதிக்கு பிறகு இவர் இடம் பெயர்கிறார். அங்கு இவரால் இன்னும் மேற்கொண்டு பயிரிடவும், சிறிதளவு வருவாய் ஈட்டவும் முடியும். ஆனால் தான் குத்தகைக்கு எடுத்த நிலத்திலேயே இவர் பயிரிட வேண்டி வந்தது. இது இவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இறுதியாக ஏராளமான செழிப்பான மற்றும் நல்ல நிலங்களை வாங்கி மற்றும் விற்றதற்குப் பிறகு பசுகிர்களிடம் இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். ஒரு பெருமளவிலான நிலத்தை சொந்தமாக வைத்துள்ள எளிமையான மனதை கொண்ட மக்கள் என்று பசுகிர்களைப் பற்றி இவரிடம் கூறப்படுகிறது. தன்னால் எந்த அளவுக்கு குறைவாக விலை பேச முடியுமோ அந்த அளவுக்கு விலை பேசி அவர்களது நிலங்களில் தன்னால் முடிந்த அளவுக்கு பெரும்பான்மையான நிலத்தை வாங்குவதற்காக பகோம் அவர்களிடம் செல்கிறார். அவர்களது வாய்ப்பளிப்பானது மிகவும் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. 1000 ரூபிள் உருசிய பணத்திற்காக பகோமால் எவ்வளவு தூரம் கடக்க முடியுமோ அவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்றும், காலையில் ஆரம்பித்து அவருடைய வழியை மண் வெட்டியால் குறியிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அந்நாளில் சூரியன் மறையும் நேரத்தில் இவர் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் திரும்பி வந்தால், இவர் சென்று வந்த வழியில் உள்ள அனைத்து நிலங்களும் இவருடையதாகும். ஆனால், இவர் தொடங்கிய இடத்தை அடையாவிட்டால் இவர் அப்பணத்தை இழந்து விடுவார். இவருக்கு எந்த நிலமும் கிடைக்காது. பகோமுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னால் ஒரு பெரிய தூரத்தை நிறைவு செய்ய முடியும் எனவும், வாழ்நாளில் ஒரே ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் எண்ணுகிறார். ஆனால், அன்றிரவு பகோமுக்கு மிக விசித்திரமான ஒரு கனவு வருகிறது. அக்கனவில் சாத்தானின் காலுக்கு கீழ் பகோம் இறந்து கிடக்கிறார். சாத்தான் சிரித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த நாள் நிலத்திற்காக ஓடும் போது தன்னால் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு நிலப் பகுதியை சூரியன் மறைவதற்கு முன்னதாக பகோம் குறியிடுகிறார். நாளின் இறுதியில் தொடங்கிய புள்ளியில் இருந்து தான் தொலை தூரத்தில் உள்ளதை உணர்கிறார். காத்துக் கொண்டிருக்கும் பசுகிர்களிடம் செல்வதற்காக, தன்னால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி வருகிறார். சூரியன் மறையப் போகும் தருணத்தில் தான் தொடங்கிய இடத்திற்கு இறுதியாக வருகிறார். பசுகிர்கள் இவருக்காக ஆரவாரம் செய்கின்றனர். ஆனால், வேகமாக தொலை தூரத்துக்கு ஓடி வந்ததால் பகோம் களைப்படைகிறார். கீழே விழுந்து இறக்கிறார். இவரது பணியாளர் வெறும் ஆறு அடி நீளமுள்ள ஒரு சாதாரண சவக்குழியில் இவரைப் புதைக்கிறார். இவ்வாறாக கதையின் தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்கிறது.
பண்பாட்டுத் தாக்கம்
தொகுதன் வாழ்வின் இறுதிக் காலத்தில் தன்னுடைய மகளுக்கு ஜேம்ஸ் ஜோய்ஸ் "இலக்கிய உலகம் அறிந்ததிலேயே மிகச் சிறந்த கதை இது தான்" என்று இக்கதையைப் பற்றி குறிப்பிட்டார்.[1] இக்கதையைப் போற்றிய மற்றொரு நன்றாக அறியப்பட்டவர் லுட்விக் விட்கென்ஸ்டைன் ஆவார்.[2] 1969ஆம் ஆண்டின் மேற்கு செருமானிய திரைப்படமான இசுகரபியா: ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? என்ற படத்தில் இச்சிறுகதையின் நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தை ஆன்சு-சுர்கென் சைபெர்பெர்க்கு இயக்கினார்.[3] மார்டின் வெய்ரோன் ஒரு வரை பட புதினமாக இக்கதையை தன் பாணியில் எழுதியுள்ளார்.[4] இந்திய தொலைக்காட்சி தொடரான கதா சாகரில் 1986ஆம் ஆண்டில் ஒரு காட்சியான "ஜாமீன்" என்பது இக்கதையை அடிப்படையாக கொண்டதாகும்.
வெளி இணைப்புகள்
தொகு- Complete Text, as translated by Louise Maude and Aylmer Maude
- "How Much Land Does a Man Need?", from RevoltLib.com
- "How Much Land Does a Man Need?", from Marxists.org
மேற்கோள்கள்
தொகு- ↑ Donna Tussing Orwin. The Cambridge Companion to Tolstoy. Cambridge University Press, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52000-2. Page 209.
- ↑ Stuart G Shanker, David Kilfoyle. Ludwig Wittgenstein. Routledge, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-14918-5. Page 339.
- ↑ "Scarabea - Wieviel Erde braucht der Mensch?". Filmportal.de (in ஜெர்மன்). German Film Institute. பார்க்கப்பட்ட நாள் 2013-03-31.
- ↑ Interview with Veyron on TV5 (in French); the work was published by Dargaud as Ce qu'il faut de terre à l'homme (Paris, 2016, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782205072471)