ஒரூஉ
ஒரூஉ என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.
கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:
- "இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
- இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
- வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
- வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)
சீர்களின் அமைப்பு
தொகுசெய்யுளின் அடியில் 1 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் ஒரூஉத்தொடை விகற்பம் எனப்படும்.
தொடை விகற்ப வகைகள்
தொகுபின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:
- ஒரூஉ மோனைத் தொடை
- ஒரூஉ இயைபுத்தொடை
- ஒரூஉ எதுகைத்தொடை
- ஒரூஉ முரண் தொடை
- ஒரூஉ அளபெடைத்தொடை
எடுத்துக்காட்டுகள்
தொகு"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்." (435-வது திருக்குறள், பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்)
மேற்கண்ட குறளில் முதலடியில் முதல் மற்றும் நான்காம் சீர்கள் "ர" என்று எதுகையெடுக்கின்றன. எனவே இச்செய்யுள் ஒரூஉ எதுகைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.