ஒரே முறை பதி, எவ்விடத்திலும் இயக்கு
ஒரே முறை பதி, எங்கும் இயக்கு ("Write once, run anywhere" -WORA), அல்லது சில சமயங்களில் ஒரே முறை பதி, எவ்விடத்திலும் இயக்கு ("write once, run everywhere -WORE), அல்லது ஒரே முறை பதி, எங்கும் திருத்து (write once, debug everywhere) என்பது, ஜாவா மொழி-யின் வசதிகளை எடுத்துரைக்கும் பொருட்டு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, தோற்றுவிக்கப்பட்ட ஒரு வாசகம் ஆகும்.[1][2] பொதுவாக, இதன் மூலம் அறியப்படுவது ஜாவா எந்தவொரு எந்திரத்திலும் வடிவமைக்கப்பட்டு, ஒரு நிலையான எண்ணுன்மி நிரற்றொடர்-ஆக தொகுக்கப்படவும் பின் ஜாவா மெய்நிகர் இயந்திரம் (JVM) கொண்ட எந்தவொரு கருவியிலும் இயங்கவும் எதிர்பார்க்கலாம். ஜாவா மெய்நிகர் இயந்திரம் சில்லில், கருவிகளில் அல்லது மென்பொருட்களில் பதிக்கப்படும் நிகழ்வு தொழில் நிறுவனங்கள் சார்ந்த நிலையான வழக்கமாக மாறிவிட்டது.
இதன் அர்த்தம் ஒரு நிரலாளர் நிரற்றொடரை ஒரு கணினியில் உருவாக்கி அதை ஜாவா இயக்க தகுதி கொண்ட செல்பேசிகளில் செயல்படவும், மேலும் வழிச்செயலிகள் மற்றும் முக்கியசட்டங்களில் ஜாவா துணையோடு எவ்வித மாற்றமும் இன்றி இயங்கவும் எதிர்பார்க்கலாம். இது நிச்சயமாக மென்பொருள் கட்டமைப்பாளர்களின் ஒவ்வொரு இயங்கு தளத்திற்கும் தங்கள் மென்பொருளின் தனிப் பதிப்பை உருவாக்கும் கடும் முயற்சியைக் குறைக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ [Sun Microsystems "JavaSoft ships Java 1.0"]. Sun Microsystems. 1996-01-23. பார்க்கப்பட்ட நாள் 2008-08-03.
Java's write-once-run-everywhere capability along with its easy accessibility have propelled the software and Internet communities to embrace it as the de facto standard for writing applications for complex networks
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Write once, run anywhere?". Computer Weekly. 2002-05-02. பார்க்கப்பட்ட நாள் 2009-07-27.