ஒலிநூல்
ஒலிநூல் என்பது அச்சிடப்பட்ட ஒரு நூலை வாசித்துக் குரல்பதிவு செய்து வெளியிடப்படும் ஒலிப்பதிப்பு அல்லது எழுத்துருவம் பெற்றிடாத கதைகளைச் சொல்லி குரல்பதிவு செய்து வெளியிடப்படும் ஒலிப்பதிப்பு என்று பொருள்படும். தற்போதைய காலக்கட்டத்தில் ஒலிநூல் ஒரு பிரபலமான நூல் வடிவமாகக் கருதப்படுகிறது.
தயாரிப்பு
தொகுஓர் ஒலிப்பதிவகத்தில் எழுத்துருவில் இருக்கும் கதையை வாசித்துப் பதிவு செய்தோ அல்லது பல்வேறு குரல் கலைஞர்களைக் கொண்டு அவர்களை இயக்குவதன் மூலம் குரல்வழி நாடகம் இயற்றிப் பதிவு செய்தோ ஒலிநூல்கள் உருவாக்கப்படுகின்றன.[1]
ஒலிப்பதிவகப் பொறியாளர், குரல்வழி இயக்குநர், கதைச்சொல்லிகள் ஆகியோர் ஒலிநூல் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சிலமுறைகளில் இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் கூட ஒலிநூல் தயாரிப்பில் அங்கம் வகிப்பர்.[2]
தற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு பலர் தங்கள் இல்லங்களிலேயே குரல்பதிவு செய்து ஒலிநூல்கள் வெளியிடுகின்றனர். தொழில் நிமித்த ஒலிபதிவகங்களில் தயாரிக்கப்படும் ஒலிநூல்கள் பதிவு செய்தமைக்குப் பிறகு, தொகுக்கப்பட்டுப் பிழைத் திருத்தமும் செய்யப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "ஒலிநூல் தயாரிப்பு - ஒரு மேற்பார்வை (ஆங்கிலம்)".
- ↑ "ஒலிநூல் வளங்கள் - ஆடியோ பப்ளிஷர்ஸ் அசோஷியேஷன் (ஆங்கிலம்)". Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)