ஒலிப்பதிர்வு

ஒலிப்பியலில், ஒலிப்பதிர்வு என்பது, ஒலியை விளக்கும் மூன்று அடிப்படைகளுள் ஒன்றாகும். இது பொதுவாக ஒலிப்பதிர்வு கொண்ட ஒலிகள், ஒலிப்பதிர்வு இல்லாத ஒலிகள் என இருவகையாகக் காணப்படும். இவற்றை முறையே ஒலிப்புடை, ஒலிப்பற்ற ஆகிய அடைமொழிகள் குறிக்கின்றன. ஒலிப்பதிர்வை இவ்வாறு இரண்டு வகையாகவே பிரித்தாலும், ஒலிப்பதிர்வின் அளவு வெவ்வேறு மட்டங்களில் காணப்படலாம்.

ஒலிப்புடை ஒலி என்பது, குரல் நாண் அதிர்வதன் மூலம் உருவாகும் ஒலியாகும். ஒலிப்பற்ற ஒலி உருவாதலில் குரல் நாண் அதிர்வதில்லை. தமிழில், க், ச், த் போன்றவை ஒலிப்பற்றவை ஆகவும், ங், ஞ், ந் போன்றவை ஒலிப்புள்ளவை ஆகவும் உள்ளன. இந்த ஒலிகளை ஒலிக்கும் போது மேற் தொண்டையில் கையை வைத்து இந்த அதிர்வை உணரமுடியும்.[1][2][3]

உயிரொலிகள் பொதுவாக ஒலிப்புடையவை ஆக இருக்க, மெய்யொலிகள் ஒலிப்புடையவை ஆகவோ அல்லது ஒலிப்பற்றவை ஆகவோ இருக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. R. M. W. Dixon. (1977). A Grammar of Yidiny. Cambridge: Cambridge University Press.
  2. The parentheses should appear under the letter, but that is not fully supported by Unicode. As of version 8.0, only central voicing and devoicing, [s̬᪽] and [z̥᪽], is encoded.
  3. Kretzschmar (1993) Handbook of the Linguistic Atlas of the Middle and South Atlantic States, University of Chicago Press, p. 122.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிப்பதிர்வு&oldid=3889607" இலிருந்து மீள்விக்கப்பட்டது