ஒலியா (Olia) என்பது வைக்கோல் அல்லது மூங்கிலால் கட்டமைக்கப்படும் ஒரு மூடிய பாத்திரமாகும். [1] பாரம்பரியமாக இது அரிசி மற்றும் பிற தானியங்களை சேமிக்க பயன்படுகிறது. [2][3] ஒடிசா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களின் பல்வேறு பழங்குடிப் பகுதிகளில் இப்பாத்திரம் பயன்படுத்தப்படுகிறது. [4][5]

புவனேசுவரத்தில் பழங்குடி விழாவில் ஓர் ஒலியா காட்சிப்படுத்தப்பட்டது

தயாரிப்பு

தொகு
 
கர்நாடகத்தில் வைக்கோலாலால் பிண்ணப்பட்ட ஓர் ஒலியா

முதலில் வைக்கோலால் கயிறுகள் பிண்ணப்படுகின்றன. இக்கயிறுகள் மோரா என்று அழைக்கப்படும் விதமாக வட்ட வடிவத்தில் இருப்பது போல இறுக்கப்படுகின்றன. ஒரு மோராவை மற்றொரு மோராவுக்கு மேல் அடுக்கி பலமோராக்கள் சேர்க்கப்பட்டு இந்த வட்ட வடிவ பாத்திரம் உருவாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rainfed Rice: A Sourcebook of Best Practices and Strategies in Eastern India. Int. Rice Res. Inst. 2000. pp. 28–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86789-02-5.
  2. Dasapalla (India : State) (1962). Report on the survey and settlement of Dasapalla Feudatory State during the years, 1917-1921. Printed at Sarada Press.
  3. Orissa (India) (1966). Orissa District Gazetteers: Cuttack. Superintendent, Orissa Government Press.
  4. Orissa Review. Home Department, Government of Orissa. 1977.
  5. Orissa (India). Harijan & Tribal Welfare Dept (1990). Tribes of Orissa. Harijan and Tribal Welfare Department, Government Of Orissa.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியா&oldid=3292722" இலிருந்து மீள்விக்கப்பட்டது