ஒலிவர் டிரெஸ்
ஒலிவர் ஜேம்ஸ் மார்க் டிரெஸ் (Oliver James Mark Tress, பிறப்பு: மே 1967) ஒரு பிரித்தானிய தொழிலதிபர் மற்றும் இங்கிலாந்து ஒலிவர் பொனாஸ் என்ற சில்லறை சங்கிலி தொடர் வர்த்தக நிறுவனத்தை நிறுவியவர். அவர் மார்ல்பரோ கல்லூரி மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார், அதன் பிறகு 1993 ஆம் ஆண்டில் லண்டனில் முதல் ஆலிவர் பொனாஸ் கடையைத் திறந்தார். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இங்கிலாந்தில் 85 ஆலிவர் பொனாஸ் கடைகள் உள்ளன. ஆலிவர் பொனாஸின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநராகவும், சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் முன்னாள் நிர்வாகமற்ற இயக்குநராகவும் இருந்த ஜினா கொலடங்கேலோவை அவர் திருமணம் செய்து கொண்டார்.
ஒலிவர் டிரெஸ் | |
---|---|
பிறப்பு | மே, 1967 ஹென்லி-ஆன்-தாமஸ், ஆக்ஸ்போர்ட்ஷிர், இங்கிலாந்து |
மற்ற பெயர்கள் | ஒலி டிரெஸ் |
கல்வி | மல்போரா கல்லூரி |
படித்த கல்வி நிறுவனங்கள் | துர்ஃகாம் பல்கலைக்கழகம் |
பணி | தொழிலதிபர் |
அறியப்படுவது | ஒலிவர் பொனாஸ் என்ற சில்லறை சங்கிலி தொடர் வர்த்தக நிறுவனத்தை நிறுவியவர் |
வாழ்க்கைத் துணை | கினா கொலடாங்கெலோ |
பிள்ளைகள் | 3 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுடிரெஸ், மே 1967 இல் ஆக்ஸ்போர்டுஷையரின் ஹென்லி-ஆன்-தேம்ஸில் பிறந்தார்[1] வில்ட்ஷயரில் உள்ள மார்ல்பரோ கல்லூரியில் கல்வி கற்ற இவர் , பின்னர் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுதனது பெற்றோர் வாழ்ந்த இடமான இலண்டன் புல்காம் சாலையில், 1993 இல், ஹாங்காங் நகைகள் மற்றும் கைப்பைகள் விற்கும் தனது முதல் ஒலிவர் பொனாஸ் கடையைத் திறந்தார்.[2] பொனாஸ் என்பது அவரது அப்போதைய காதலி அன்னாவின் குடும்பப்பெயர் ( இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலி கிரெசிடா பொனாஸின் உறவினர்).
2019 ஆம் ஆண்டில், ட்ரெஸ் எச்எஸ்பிசியிடமிருந்து பெற்ற 15 மில்லியன் சுழலும் கடன் வசதி, மேலும் எட்டு கடைகளைத் திறக்க உதவியது.[3] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இங்கிலாந்தில் 85 ஆலிவர் பொனாஸ் கடைகள் உள்ளன.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅவர் பி.ஆர் மற்றும் பரப்புரை நிறுவனமான லூதர் பென்ட்ராகனுக்கான இயக்குநராகவும் முக்கிய பங்குதாரராகவும் இருந்த ஜினா கொலடங்கேலோவை திருமணம் செய்து கொண்டார், இப்போது ஆலிவர் பொனாஸின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநராக உள்ளார்.[5] கொலடங்கேலோ சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையில் நிர்வாகமற்ற இயக்குநராகவும் உள்ளார்; சுகாதார மற்றும் சமூக பராமரிப்புத்துறையின் செயலாளரான மாட் ஹான்காக்கின் உதவியாளரும் எஜமானியும் ஆவார்.[6] கொலடங்கேலோ மற்றும் ஹான்காக் இருவரும் 1995 முதல் 1998 வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் (பிபிஇ) படித்தனர், மேலும் மாணவர் வானொலி நிலையத்தில் ஒன்றாக பணியாற்றினர்.[7] ஜூன் 2021 இல், ஹான்காக் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கொலடாங்கெலோவுக்காக அவர் தனது மனைவியை விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.[8][9][10]
டிரெஸ் மற்றும் கொலடாங்கெலோவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] 2015 ஆம் ஆண்டில், அவர்கள் கிளாபம் சந்திப்பிலிருந்து லண்டனின் வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டிற்கு உள்ளுறை செவிலித்தாயுடன் சென்றனர்.[1][7]
வெஸ்ட் சிட்டெக்ஸில் உள்ள வெஸ்ட் விட்டரிங்கில் ஆக்டிவேர் பிராண்ட் ஸ்வெட்டி பெட்டியின் இணை நிறுவனர் சைமன் ஹில்-நார்டனுடன் இணைந்து டிரெஸ் சொத்து வைத்திருக்கிறார், மற்றொரு குடியிருப்பாளர் தனது தோட்டத்தை பிரிக்கும் பொது நடைபாதையின் கீழ் 5 அடி சுரங்கப்பாதை தோண்டுவதை எதிர்த்தார், ஆனால் இறுதியில் திட்டமிடல் அனுமதி ஒரு முறையீட்டிற்குப் பிறகு வழங்கப்பட்டது.[11]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Graham, Natalie (27 November 2015). "My First Million — Oliver Tress, retailer". The Financial Times இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210625072813/https://www.ft.com/content/dad86c06-7979-11e5-a95a-27d368e1ddf7.
- ↑ Wills, Kate (25 June 2021). "Who is the owner of Oliver Bonas and how has he captured middle-class hearts?". The Independent. https://www.independent.co.uk/life-style/fashion/features/oliver-bonas-tress-founder-owner-b1872830.html.
- ↑ "Olly Tress: Founder and CEO, Oliver Bonas". Drapers. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.
- ↑ "Oliver Bonas to open 8 new stores in 2019, creating 80 jobs – Retail Gazette". www.retailgazette.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
- ↑ Plummer, Kate (25 June 2021). "Who’s who in Matt Hancock ‘affair’ as Health Secretary ‘caught kissing aide’ on CCTV". The Independent. https://www.indy100.com/news/hancock-affair-gina-coladangelo-tress-b1872666.
- ↑ Walker, Peter (25 June 2021). "No 10 rebuffs calls to sack Matt Hancock for kissing aide". The Guardian. https://www.theguardian.com/politics/2021/jun/25/no-10-rebuffs-calls-to-sack-matt-hancock-for-kissing-aide.
- ↑ 7.0 7.1 Waddell, Lily (26 June 2021). "Who is Gina Coladangelo? Matt Hancock is accused of having affair with close aide and multi-millionaire’s wife". Evening Standard. https://www.standard.co.uk/news/politics/who-is-gina-coladangelo-hancock-affair-rumours-close-aide-b942663.html.
- ↑ "Matt Hancock resigns as health secretary after kissing aide – follow live". The Independent (in ஆங்கிலம்). 2021-06-26. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ "Matt Hancock resigns as health secretary after admitting breaking COVID rules". Sky News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ Pogrund, Tim Shipman and Gabriel. "Matt Hancock quits over affair with Gina Coladangelo". https://www.thetimes.co.uk/article/hancock-finally-quits-nrkrgss2t.
- ↑ Brown, David (8 January 2021). "Bore War: millionaire wins two-year fight versus wealthy neighbours over garden tunnel". The Times. https://www.thetimes.co.uk/article/bore-war-millionaire-wins-two-year-fight-versus-wealthy-neighbours-over-garden-tunnel-bkq68hc63.