ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககால அரசர்கள்களில் ஒருவன். இவனது தந்தை ஒல்லையூர் கிழான். இவன் ஆண்ட நாடு ஒல்லையூர் நாடு. தலைநகர் ஒல்லையூர். இவன் சிறந்த வள்ளல்களில் ஒருவன். வல்வேல் சாத்தன் என இவன் போற்றப்பட்டான். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தாக்கிய போரில் இவன் மாண்டான். இவனை இழந்த துக்கத்தில் அவன் நாட்டு இளைஞர்களும், இளம்பெண்களும், யாழால் வளைத்துப் பறித்துச் சூடும் பாணர்களும், பாடினிப் பெண்களும் மகிழ்ச்சியின் அடையாளமாகச் சூடும் முல்லைப் பூவைச் சூடவில்லையாம். அத்துணைத் துக்கம் அவர்களுக்கு. [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
    நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி,
    பாணன் சூடான்; பாடினி அணியாள்;
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? (புறம் 242)