ஒளிச்சிதைவு
ஒளிச்சிதைவு அல்லது ஒளிப்பிரிகை (photodisintegration, phototransmutation, அல்லது photonuclear reaction) என்பது ஓர் அணுக்கருத் தாக்கம் ஆகும். இத்தாக்கத்தின் போது ஓர் அணுக்கரு ஆற்றல்-மிக்க காம்மா கதிரை ஏற்று, கிளர்வு நிலைக்கு சென்று, உடனடியாக ஓர் அணுவடித்துகளை வெளியேற்றித் தேயும் நிகழ்வாகும். உள் வரும் காம்மா கதிர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நொதுமிகள், நேர்மின்னிகள், அல்லது ஒரு ஆல்ஃபா துகளை கருவில் இருந்து உந்தித் தள்ளுகின்றது.[1] இவ்வகையான வினைகள் (γ,n), (γ,p), (γ,α) எனப்படுகின்றன. பொதுவாக மின்காந்த அலைகளின் ஆற்றலைப் பொறுத்து தாம்சன் சிதறல், ஒளிமின் விளைவு, காம்டன் விளைவு முதலியன நிகழ்வதை பார்க்க முடிகிறது.
ஒளிச்சிதைவு இரும்பை விட இலகுவான அணுக்கருக்களுக்கு வெப்பங்கொள் (ஆற்றல் உறிஞ்சுதல்) வினையாகவும், இரும்பை விட கனமான அணுக்கருக்களுக்கு சில நேரங்களில் வெப்ப உமிழ் (ஆற்றல் வெளியீடு) வினையாகவும் இருக்கும்.
தியூட்டிரியத்தின் ஒளிச்சிதைவு
தொகு2.22 MeV அல்லது அதிக ஆற்றலைக் கொண்டுள்ள ஒளியன் ஒன்று தியூட்டிரியம் அணுவுடன் ஒளிச்சிதைவில் ஈடுபடும். இதன் போது ஐதரசனும் ஒரு நியூத்திரனும் கிடைக்கப்பெறுகின்றன:
ஜேம்ஸ் சாட்விக், மோரிசு கோல்தாபர் ஆகியோர் இந்த வினையை புரோத்தன்-நியூத்திரன் திணிவு வேறுபாட்டை அறியப் பயன்படுத்தினர்.[2]
பெரிலியத்தின் ஒளிச்சிதைவு
தொகு1.67 MeV அல்லது அதிக ஆற்றலைக் கொண்டுள்ள ஒளியன் ஒன்று பெரிலியம்-9 (100% தூய பெரிலியம்) உடன் ஒளிச்சிதைவில் ஈடுபடும். இதன்போது இரு ஈலியம் அணுக்களும் ஒரு நியூத்திரனும் கிடைக்கப்பெறுகின்றன:
ஒளிப்பிளவு
தொகுஒளிப்பிளவு (Photofission) என்பது ஆற்றல் மிக்க காமா கதிர்கள் பிளவுறு தனிமங்களான யுரேனியம், பொலோனியம் போன்ற தனிமங்களில் மோதி ஏறக்குறைய சம நிறையுடைய துகள்களையும் சில நியூட்ரான்களையும் வெளிக்கொணரும் கருவினையாகும்.
குறிப்புகள்
தொகு- ↑ Clayton, D. D. (1984). Principles of Stellar Evolution and Nucleosynthesis. University of Chicago Press. pp. 519. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-22-610953-4.
- ↑ Chadwick, J.; Goldhaber, M. (1934). "A nuclear 'photo-effect': disintegration of the diplon by γ rays". Nature 134 (3381): 237–238. doi:10.1038/134237a0. Bibcode: 1934Natur.134..237C.