ஒளியின் அலைக்கொள்கை

ஒளியின் அலைக்கொள்கை 1660-களில் இராபட் ஊக் என்ற ஆங்கிலேய அறிவியலாரால் வெளியிடப்பட்டு பின்னர் 1678-இல் கிரிசுடியான் ஐகென்சு என்ற டச்சு அறிவியலாரால் இப்போது அறியப்படும் அலைக்கொள்கையின் முதல் வடிவத்தில் முன்மொழியப்பட்டது. இக்கொள்கையின்படி, ஒளி அலைகள் ஈதர் என்றொரு கற்பனை ஊடகத்தில் பரவுவதாகக் கொள்ளப்பட்டது. (ஏனெனில், அலைகள் பரவுதலுக்கு ஊடகம் கண்டிப்பாகத் தேவை என்றொரு கருத்து அக்காலத்தில் நிலவியது; ஒளி போன்ற மின்காந்த அலைகள் இதற்கு விதிவிலக்கு என்பது பின்னர் அறியப்பட்டது).

ஒளி எவ்வாறு பரவுகிறது? தொகு

இக்கேள்விக்கு விடையளிக்கும் வகையில் இரு கொள்கைகள் முன்மொழியப்பட்டன:

  • நுண்துகள் கொள்கை -- இது சர் ஐசக் நியூட்டனால் முன்மொழியப்பட்ட கருத்தாகும்.
  • அலைக்கொள்கை -- இது ஐகென்சு என்பவரால் முன்மொழியப்பட்டதாகும்.

பண்டைய கிரேக்கர்கள் ஒளி துகள்களின் வழியாக ஒளிமூலத்திலிருந்து பரவுவதாகக் கற்பனை செய்தனர்; அவை மிகவும் நுண்ணிய துகள்களாக இருப்பதால் கண்ணிற்குத் தெரிவதில்லை என்று கூறினர்.[1] ஒளியின் நேர்க்கோட்டுப் பரவுதல், எதிரொளிப்பு, ஒளிவிலகல் ஆகிய நிகழ்வுகளை எளிதில் விளக்கியதன் மூலம் நியூட்டன் ஒளி நுண் துகள் வடிவிலேயே பரவுகின்றது என்று கூறினார்.[2]

அலைக்கொள்கை காலக்கோடு தொகு

மேலும் காண்க தொகு

  • சர் வில்லியம் தாம்சனின் (கெல்வின் பிரபு) சொற்பொழிவு [1]
  • த.வி.-யில் ஐகன்சு–பிரனெல் தத்துவம் [2]

குறிப்புதவி தொகு

  1. அவ் ஸ்டப்சு ஒர்க்சு
  2. "ஆரக்கிள் திங்க் குவெஸ்ட்". Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2010-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியின்_அலைக்கொள்கை&oldid=3547057" இலிருந்து மீள்விக்கப்பட்டது