ஒளியியல் அடர்த்தி
நிறமாலையியலில் ஒளியியல் அடர்த்தி (optical density[1][2] அல்லது absorbance) என்பது கதிரியக்கம் கொண்டு எடுக்கப்படும் படத்தில் (radiograph) ஓரிடத்தில் காணப்படும் கருமையின் அளவாகும்.
பொருள் ஒன்றின் ஒளியியல் அடர்த்தி, பொருளில் படும் கதிர்வீச்சுக்கும், பொருளினூடாகச் செல்லும் கதிர்வீச்சிற்குமான விகிதத்தின் மடக்கை ஆகும்.[3][4]
- ,
இங்கு,
- - ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் () ஒளியியல் அடர்த்தி.
- என்பது பொருளினூடாக செல்லும் கதிர்வீச்சின் செறிவு,
- என்பது பொருளில் படும் கதிர்வீச்சின் செறிவு.
எடுத்துக் காட்டிற்காக படுகதிரின் செறிவு 1000 என்றும் விடுகதிரின் செறிவு 10 என்றும் கொண்டால், ஒளியியல் அடர்த்தி 2 என்றாகிறது. இதுவே தேர்ந்த புள்ளியில் ஒளியியல் அடர்த்தியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "optical density". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ Laser Guidebook, by Jeff Hecht, p79
- ↑ Mehta, A. UV-Visible Spectroscopy- Derivation of Beer-Lambert Law
- ↑ "Dictionary — Definition of absorptance". Websters-online-dictionary.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.