ஒளியிலே தெரிவது (சிறுகதைத் தொகுப்பு)
ஒளியிலே தெரிவது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு முதலில் 2010-ல் வெளிவந்தது. இத்தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான ஒளியிலே தெரிவது என்பதே இப்புத்தகத்தின் பெயராகவும் அமைந்துள்ளது. இப்புத்தகத்திற்கு என் பேனா உட்பட எனும் தலைப்பில் வண்ணதாசன் முன்னுரை எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் காப்புரிமை வண்ணதாசன் அவர்களிடம் உள்ளது. தூங்காமல் தூங்கிவிட்ட மாணிக்கவாசகம் என்கிற எங்கள் அருமை மாணிக்கத்திற்கு என இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
நூலாசிரியர் | வண்ணதாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | சிறுகதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | சந்தியா பப்ளிகேஷன் |
பக்கங்கள் | 160 |
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள்
தொகுஇப்புத்தகத்தில்
- சிநேகிதிகள்
- இமயமலையும் அரபிக்கடலும்
- சில ராஜா ராணிக் கப்பல்கள்
- யாரும் இழுக்காமல், தானாக
- ஒரு கூழாங்கல்
- சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு
- காணாமல் போகும் வாய்க்கால்கள்
- ஒரு போதும் தேயாத பென்சில்
- ஒளியிலே தெரிவது
- இன்னொன்றும்
- துரு
- மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை
ஆகிய சிறுகதைகள் உள்ளன.
பின்னட்டைக் குறிப்புகள்
தொகுஇப்புத்தகத்தின் பின்னட்டையில்,
நான் என் கிளையோடும், இலையோடும், நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்.
என்ற கவிதை இடம் பெற்றுள்ளது.