ஒளிவினை நொதி
ஒளிவினை நொதிகள் அல்லது போட்டோலியேசுகள் (Photolyases (EC 4.1.99.3)) என்பன மரபணு (DNA) வழுநீக்கி நொதிகள் ஆகும். இவை கதிரவனின் இருந்து வெளிப்படும் புறவூதாக்கதிர்கள் அல்லது பிறசூழல்களில் உள்ள புற ஊதாக்கதிர்களால் மரபணுவுக்கு ஏற்படும் பழுதைச் சரி செய்யும் நொதி ஆகும். இந்நொதி செயல்படுவதற்கு நீல நிறம் அல்லது புற ஊதாக்கதிர்கள் தேவை. இதனை ஒளிவினை (ஒளியால் உந்தப்பட்டும் வினை) வழி இயங்கும் செயற்பாடு என்பர் (photoreactivation)
ஒளிவினை நொதிகள் (Photolyases) மரபணுவில் இணைவான (complementsary) இழைகளை இணைக்கின்றன, ஆனால் சில வகையான பைரிமிடைன் இரட்டைகளைப் (pyrimidine dimers) பிரிக்கின்றன. இப் பைரிமிடைன் இரட்டைகள் மரபணுவின் ஒரே இழையில் ஓர் இணையான தைமைன் (thymine) அல்லது சைட்டோசைன் (cytosine) அடிக்கூறுகள் (bases) பகிர்பிணைப்பு (covalent) வழி ஏற்படுவதால் உண்டாகின்றன.இந்த இரட்டை பைரிமிடைன்கள் மரபணு அமைப்பின் ஒரு புடைப்பை ஏற்படுத்துகின்றது. இதனைப் பிளப்பு அல்லது கீறல் (lesion) என்பர். ஒளிவினை நொதிகள் இந்தப் புடைப்பால் ஈர்க்கப்பட்டு அவற்றோடு பிணைந்து பழைய நிலைக்குமாற்றுகின்றது.
வெய்யிலில் செல்லும் முன் உடலில் பூசிக்கொள்ளும் சில குழைமத்தில் இந்த ஒளிவினை நொதி சேர்க்கப்படுகின்றது.[1]
இந்த நொதி பலவகையான நுண்ணுயிரிகளிலும், பூஞ்சைக் காளான்களிலும் விலங்குகளிலும் காணப்படுகின்றன.[2] ஆனால் மாந்தர்களின் உயிரணுக்களில் காணப்படுவதில்லை.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ Dagmar Kulms, Birgit Pöppelmann, Daniel Yarosh, Thomas A. Luger, Jean Krutmann and Thomas Schwarz (1999). Nuclear and cell membrane effects contribute independently to the induction of apoptosis in human cells exposed to UVB radiation PNAS 96(14):7974-7979
- ↑ Selby, Christopher P.; Sancar, Aziz (21 November 2006). "A cryptochrome/photolyase class of enzymes with single-stranded DNA-specific photolyase activity". Proceedings of the National Academy of Sciences of the United States of America 103 (47): 17696–700. doi:10.1073/pnas.0607993103. பப்மெட்:17062752.
வெளியிணைப்புகள்
தொகு- சயன்ட்டிஃவிக் அமெரிக்கன், சூலை 25, 2010 பரணிடப்பட்டது 2010-07-27 at the வந்தவழி இயந்திரம்