ஒளி ஐதரசன் (Photohydrogen) என்பது செயற்கை அல்லது இயற்கை ஒளியின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் ஐதரசன் ஆகும். நீர் மூலக்கூறுகளை புரோட்டான்கள் எனப்படும் ஐதரசன் அயனிகளாகவும், கார்போவைதரேட்டுகளை உருவாக்கப் பயன்படும் எலக்ட்ரான்களாகவும், ஆக்சிசன் என்ற காற்றில் வெளியிடப்படும் கழிவுப் பொருளாகவும் ஒரு மரத்தின் இலை பிரிக்கிறது.[1] புற ஊதா ஒளி மூலம் நீரின் ஒளிச்சேர்க்கையால் கூட ஒளி ஐதரசன் உற்பத்தி செய்யப்படலாம்.

சில நேரங்களில் பாக்டீரியா அல்லது பாசி போன்ற நுண்ணிய உயிரினங்களைப் பயன்படுத்துவதன் மூலம்.சூரிய ஒளியிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறும் சூழலில் ஒளி ஐதரசன் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நுண் உயிரினங்கள் ஐதரசனேசு நொதிகளின் உதவியுடன் ஐதரசனை உருவாக்குகின்றன. அவை நீரைப் பிளக்கும் வினையிலிருந்து பெறப்பட்ட புரோட்டான்களை ஐதரசன் வாயுவாக மாற்றுகின்றன. பின்னர் இவை சேகரிக்கப்பட்டு உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[2][3]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. NOVA scienceNOW - A 14 minute video of the Nova broadcast about hydrogen எரிபொருள் மின்கலம் cars that aired on PBS, July 26, 2005. Hosted by Robert Krulwich with guests, Ray Magliozzi and Tom Magliozzi, the Car Talk brothers.
  2. Gartner, John (2002-08-19). "Algae: Power Plant of the Future?". Wired. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2006-09-17.
  3. Mechanic, Michael (April 2002). "It Came From the Swamp". Wired. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2006-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_ஐதரசன்&oldid=3447274" இலிருந்து மீள்விக்கப்பட்டது