ஒழிமுறி

ஒழிமுறி, 2012ல் வெளிவந்த மலையாளத் திரைப்படம். இந்தப்படம் தென்திருவிவாதங்கூர் நாடாக இருந்த இன்றைய குமரிமாவட்டத்தில் இருந்த மருமக்கள் வழி சொத்துரிமை அமைப்பின் சிக்கல்களைச் சொல்கிறது. ஒழிமுறி என்றால் திருமண முறிவு பத்திரம் என்று பொருள்.

ഒഴിമുറി
(ஒழிமுறி)
இயக்கம்மதுபால்
தயாரிப்புபி. என். வெணுகோபால்
கதைஜெயமோகன்
இசைபிஜிபால்
நடிப்புலால், பாவனா, மல்லிகா, ஷ்வேதா மேனன்
ஒளிப்பதிவுஅழகப்பன்
கலையகம்பி. என். வி. அசோசியேட்சு
வெளியீடுசெப்டம்பர் 7, 2012 (2012-09-07)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதைதொகு

72 வயதான தாணுபிள்ளையை அவர் மனைவி மீனாட்சிப்பிள்ளை தன் 55 ஆவது வயதில் விவாகரத்து செய்ய விரும்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது படம் ஆரம்பமாகிறது. இந்த வயதில் விவாகரத்து கோர என்ன காரணம் என்று தாணுபிள்ளையின் வழக்கறிஞரான அருமைநாயகத்தின் உதவியாளர் பாலாமணி அறியமுயல்கிறாள்.

பாலாமணி மீனாட்சிப்பிள்ளையின் மகன் சரத் சந்திரனிடம் நெருக்கமாகிறாள். மெதுவாக அந்த உறவின் உள்ளடுக்குகள் தெரியவருகின்றன. தாணுபிள்ளை மிகமிகக் குரூரமான ஓர் கணவர் , கோபம் மிகுந்த அப்பா என்ற சித்திரம் அவளுக்கு கிடைக்கிறது. தாணுபிள்ளை மருமக்கள்தாய குடும்ப பின்னணி கொண்டவர். அவள் மக்கள்தாய குடும்பத்தைச்சேர்ந்த மீனாட்சிப்பிள்ளையை திருமணம் செய்ததே அவள் தன் சொல்படி வாழ்வாள் என்பதனால்தான். மனைவியை தன் அடிமையாக நடத்துகிறார் தாணுபிள்ளை.

அதற்குக் காரணம் தாணுபிள்ளையின் இளமை வாழ்க்கை. அவரது அம்மா காளிப்பிள்ளை கம்பீரமான பெண்மணி. சுதந்திரமானவர். அவர் தாணுபிள்ளையின் தந்தை மல்லன் சிவன்பிள்ளையை உதறிவிட்டு இன்னொருவரை கணவராக ஏற்றாள். மல்லன் சிவன்பிள்ளை அனாதையாக செத்தார். அந்த நினைவு தாணுபிள்ளையை பெண்ணை அடிமையாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக ஆக்குகிறது

கதை இரண்டாம் பகுதிக்குச்செல்லும்போது தாணுபிள்ளையின் மனம் வெளிப்படுகிறது. அவர் தன் மகன் மீது பேரன்புகொண்டவராக இருக்கிறார். தன் அன்னைமேல்கூட உள்ளூர அன்புடையவர் அவர். தாணுபிள்ளையை மெதுவாக புரிந்துகொள்ளும் மீனாட்சிப்பிள்ளை ஒரு பெண் பெண்ணுக்கான எல்லா கடமைகளையும் செய்யும்போதே சுதந்திரமாகத்தான் இருந்தாகவேண்டும் என்றும் முடிவுசெய்கிறார். ஆகவே அவர் விவாகரத்து கோருகிறார்


நடிகர்கள்தொகு

 • லால் (தாணுபிள்ளை)
 • மல்லிகா (மீனாட்சிப்பிள்ளை)
 • பாவனா (பாலா)
 • ஆசிஃப் அலி (சரத்)
 • ஸ்வேதாமேனன் (காளிப்பிள்ளை)
 • எம். ஆர். ஹரிகுமார்
 • பாலாஜி
 • அய்யப்ப பைஜூ
 • நந்து

தொழில்நுட்பம்தொகு

ஒழிமுறி மதுபால் இயக்கிய இரண்டாவது படம். விருதுகள் பெற்ற தலைப்பாவுக்குப் பின் மதுபால் இயக்கிய படம் இது.

இசை - பிஜிபால்.
ஒளிப்பதிவு - அழகப்பன்.
பாடல்கள் - ஜெயமோகன், வயலார் சரத்சந்திர வர்மா.
கதை, திரைக்கதை, வசனம் - ஜெயமோகன்

பின்னணிதொகு

எழுத்தாளர் ஜெயமோகன் பாஷாபோஷினி இதழில் தன் சுயசரிதைக்குறிப்பாக எழுதிய கட்டுரைகள் மாத்ருபூமி பதிப்பகத்தால் ‘உறவிடங்கள்’ என்றபேரில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகளின் அடிப்படையில் ஜெயமோகன் எழுதிய கதை திரைக்கதை வசனம் இந்தப்படத்தில் உள்ளது

விமர்சனம்தொகு

ஒழிமுறி மலையாளவிமர்சகர்களால் ஒரு கிளாசிக் என்று கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் இதற்கு எழுதப்பட்டன. எல்லா விமர்சனங்களுமே மிகச்சிறந்த திரைக்கதை, இயக்கம், நடிப்பு கொண்ட படம் என இதை பாராட்டியிருந்தன. ஒழிமுறிபற்றி கலாச்சார இதழ்களில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன

விருதுகள்தொகு

ஒழிமுறி 2012 கோவா திரைவிழாவுக்கும் இந்தியன் பனோரமாவுக்கும் தேர்வாகியது.

 • துபாய் திரைவிழா
 • திருவனந்தபுரம் திரைவ்ழா
 • 2012 மனொரமா விருது சிறந்த நடிகைக்காக ஸ்வேதாமேனனுக்குக் ஒழிமுறிக்காக கிடைத்தது
 • 2012க்கான கேரள அரசு விருதுகளில் மிகச்சிறந்த இரண்டாம் படம் என ஒழிமுறி தேர்ந்தெடுக்கப்பட்டது. இசைக்காக பிஜிபால் உடையலங்காரத்துக்காக ஆகியோர் விருதுபெற்றார்கள்
 • 2012க்கான சிறந்த நடிகர்களுக்கான தேசியவிருதில் லால் ஒழிமுறிக்காக மூன்றாமிடத்தில் இருந்தார். ஜூரி சிறப்புக்குறிப்பு அளிக்கபப்ட்டது
 • 2012க்கான கேரள திரை விமர்சகர் கூட்டமைப்பின் விருது சிறந்த நடிப்பு [லால்] சிறந்த படம், சிறந்த திரைக்கதை [ஜெயமோகன்] வழங்கப்பட்டது
 • 2012க்கான டி ஏ ஷாகித் திரைக்கதை விருது ஜெயமோகன்-க்கு வழங்கப்பட்டது

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழிமுறி&oldid=2704087" இருந்து மீள்விக்கப்பட்டது