ஒஸ்மா பெருங்கோவில்

ஒஸ்மா பெருங்கோவில் (Burgo de Osma Cathedral) என்பது மத்திய எசுப்பானியாவின், எல் பேர்கோ டி ஒஸ்மாவினில் (El Burgo de Osma) அமைந்துள்ள கோதிக் கட்டிடக்கலை அம்சத்துடன் கூடிய பெருங்கோவில் ஆகும். எசுப்பானியாவின் பாதுகாக்கப்பட்ட இடைக்காலக் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] அத்துடன் 13 ஆம் நூற்றாண்டின் கோதிக் கட்டிடங்களுக்கு நல்லதோர் உதாரணமாக இதைக் கருதுகின்றனர்.[2] இதன் கட்டுமானப் பணிகள் 1232 ஆண்டு ஆரம்பித்து 1784 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இதன் கன்னிமடம் 1512 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அத்துடன் கோபுரம் 1739 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[3] இது புனித மரியாளுக்குரித்தான பேராலயம் ஆகும்.

ஒஸ்மா பெருங்கோவில்
Cathedral of Burgo de Osma
ஒஸ்மா பெருங்கோவில் (Cathedral of Burgo de Osma)
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்41°35′08″N 3°04′16″W / 41.585629°N 3.071°W / 41.585629; -3.071
சமயம்கத்தோலிக்கம்
மண்டலம்கஸ்டிலே லியோன்
மாகாணம்சோரியா மாகாணம்
ஆட்சிநிலம்Roman Catholic Diocese of Osma-Soria
செயற்பாட்டு நிலைசெயற்பாட்டிலுள்ளது

அருங்காட்சியகம்

தொகு

இங்கு சமய ஓவியங்கள் பல காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ancient descriptions of movement disorders: Cathedral el Burgo de Osma (Soria, Spain)". J. Neurol. 253 (6): 731–4. June 2006. doi:10.1007/s00415-006-0100-8. பப்மெட்:16511653. 
  2. http://www.jstor.org/pss/4104302
  3. "El Burgo de Osma, Spain: tourism in El Burgo de Osma, Spain". Spain.info. 2007-04-23. Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒஸ்மா_பெருங்கோவில்&oldid=3547080" இலிருந்து மீள்விக்கப்பட்டது