ஓசுமியம் அயோடைடு
ஓசுமியம் அயோடைடு (Osmium iodide) OsIn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டில் அமைந்த எந்த்வோர் ஓசுமியம் சேர்மத்தையும் குறிக்கும். பல ஓசுமியம் அயோடைடுகள் இருப்பதற்கான சாத்தியம் இருந்தாலும் ஓசுமியம் டெட்ரா அயோடைடு மட்டுமே எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகளில் சரிபார்க்கப்பட்டுள்ளது.[1][2]
ஓசுமியம்(I) அயோடைடு
தொகுஓசுமியம்(I) அயோடைடு என்பது OsI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஓசுமியத்தின் அயோடைடு சேர்மம் ஆகும். ஓசுமியம் டெட்ராக்சைடுடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து கார்பன் டை ஆக்சைடு சூழலில் தண்ணீரில் சூடேற்றப்பட்டால் ஓசுமியம்(I) அயோடைடு உருவாகிறது. சாம்பல் நிறத்தில் படிக உருவமற்ற உலோகமாக இது காணப்படுகிறது.
ஓசுமியம்(II) அயோடைடு
தொகுஓசுமியம்(II) அயோடைடு என்பது OsI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஓசுமியத்தின் அயோடைடு சேர்மம் ஆகும். ஓசுமியம் டெட்ராக்சைடுடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து நைட்ரசன் முன்னிலையில் 250 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் கருப்பு நிற திண்மமாக இது உருவாகிறது.:[2]
- OsO4 + HI → OsI2 + H2O
நீருடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் ஓசுமியம்(II) அயோடைடு சிதைவடைகிறது.[3]
ஓசுமியம்(III) அயோடைடு
தொகுஓசுமியம்(III) அயோடைடு என்பது OsI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஓசுமியத்தின் அயோடைடு சேர்மம் ஆகும். ஆறயோடோ ஓசுமிக் அமிலத்தைச் (H2OsI6) சூடாக்கி இதை தயாரிக்கலாம்.[2] கருப்பு நிறத்தில் காணப்படும் இது தண்ணீரில் கரையாது.[3]
ஓசுமியம்(IV) அயோடைடு OsI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஓசுமியத்தின் அயோடைடு சேர்மம் ஆகும். ஓசுமிக் அமிலத்துடன் (H4OsO6) ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஓசுமியம்(IV) அயோடைடு உருவாகிறது.[4] ஆனால் மீண்டும் தயாரிக்க முற்படுகையில் ஈரைதரோ ஆக்சோனியம் ஆறயோடோ ஓசுமேட்டு உருவானது. இதை சூடுபடுத்தினால் ஓசுமியம்(IV) அயோடைடுக்குப் பதிலாக ஓசுமியம்(I) அயோடைடு, ஓசுமியம்(II) அயோடைடு, ஓசுமியம்(III) அயோடைடுகள் மட்டுமே கிடைக்கின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Köhler, J. (2014). "Halides: Solid-State Chemistry". Encyclopedia of Inorganic and Bioinorganic Chemistry. pp. 1–22. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781119951438.eibc0078.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781119951438.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Fergusson, J. E.; Robinson, B. H.; Roper, W. R. (1962). "405. Iodides of osmium and rhenium". Journal of the Chemical Society (Resumed): 2113. doi:10.1039/JR9620002113.
- ↑ 3.0 3.1 George K. Schweitzer; Lester L. Pesterfield (2009). The Aqueous Chemistry of the Elements (Ebook) (in ஆங்கிலம்). Oxford University Press. p. 321. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199742196. பார்க்கப்பட்ட நாள் 11 November 2021.
- ↑ "The Chemistry of Osmium". the Sciences (Scientific American). 1893. doi:10.1038/scientificamerican04291893-14453supp.