ஓஜாபாலி
ஓஜாபாலி (Ojapali), என்பது இந்தியாவின் அசாம் பகுதியைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். ஓஜாபாலி கதை சொல்லும் மரபில் இருந்து உருவானதாக நம்பப்படுகிறது. மற்றும் இந்த நடனம், ஒரு குழுவாக நிகழ்த்தப்படுகிறது. இது அசாமின் பழமையான கலை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
தோற்றம்
தொகுஓஜாபாலி நடனம், முதலில் பிரம்மபுத்ரா நதியின் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் தோன்றியதாக கருதப்படுகிறது. பின்னர் தாரங்கி மன்னர் தர்மநாராயணனின் ஆதரவின் கீழ் தரங் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இந்த வகை நடனம், பாடல்கள், வசனங்கள், சைகை, மேம்படுத்தப்பட்ட நடிப்பு மற்றும் நாடகமாக்கல் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது, இந்து மத இசை நான்கு கலைகளைக் கொண்டுள்ளது என்பதை தெளிவாகக் குறிக்கிறது.
ஓஜாபாலி போன்ற நடன நாடக வடிவம், 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நடனத்தின் கருப்பொருளாக விஷ்ணு மற்றும் சிவனுடனான தொடர்புடைய பல சான்றுகள் காணப்படுகின்றன. இதுதொடர்பாக 'காந்தர்வா' மற்றும் 'ஜாகூர்' ஒரு சான்றாகக் காணப்படுகிறது.
பொது மக்கள் மத்தியில் ஓஜபாலியை நேரடியாக "நாரதர் முனி" சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்தார் எனவும், வேறு சிலர், அதை பாண்டு புத்திரர் “அர்ஜுனன்” கொண்டு வந்தார்; மேலும், அர்சுனர், 'பிருகன்நளை' கதாபாத்திரத்தில் ஓஜாவாக நடித்தார் எனவும் கருத்து நிலவுகிறது. ஓஜாபாலி கலையின் இந்த பண்டைய வடிவம் கோயில்கள் போன்ற மத இடத்திலிருந்து தோன்றியது எனப்படுகிறது. இதன் கருப்பொருளாக இராமாயணம், மகாபாரதம் மற்றும் பத்மபுராணக் கதைகள் இடம்பெறுகின்றன.
ஓஜாபாலியில் பயன்படுத்தப்படும் மொழி பண்டைய அசாமி மற்றும் எங்காவது சமசுகிருதத்தின் வசனங்கள் பயன்படுத்தப்படுகிறது. [1]
நடன அமைப்பு
தொகுஇந்த நடனக்குழு உறுப்பினர்களில் ஒருவர் ஓஜாஎனப்படும் தலைவராக உள்ளார். இவர், அக்குழுவில் நன்றாகப் பாடவும், ஆடவும் தெரிந்தவராக உள்ளார். மேலும், இவர் பாடலுடன் கதைக்கேற்ற வசனங்களை தனது நடிப்பின் மூலம் விளக்குபவராகவும் உள்ளார். இவருக்கு துணையாக 4 அல்லது 5 பேர் நடனக்குழுவில் உள்ளனர். அவர்கள் பாலி எனப்படுகின்றனர். தலைவரான ஓஜா, செயல்திறனை வழிநடத்துகிறார் மற்றும் நான்கு அல்லது ஐந்து பாலிக்கள், ஹுட்டிடால் எனப்படும் சிலம்பலை இசைப்பதன் மூலம் தொடர்ச்சியான தாளத்துடன் செயல்திறனை நிரப்புகிறார்கள். ஓஜாவின் வலது புறத்தில் நிற்கும் பாலி, டைனா பாலி எனப்படுகிறார். இவரும் செயலில் ஈடுபடுகிறார். டைனா பாலியும், ஓஜாவும் செயல்திறனை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். மேலும், டைனா பாலி, தனது சொந்த சத்ரியா ஓஜாபாலியையும் உருவாக்குகிறார். இக்குழுவில் உள்ள அனைவரும் வெண்மை நிறத்தில், நீளமான உடை அணிகின்றனர். வெள்ளியினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து கொள்கின்றனர். தலைவர் ஓஜா, கூரி, பங்கலாஸ், உன்டி, நுபுர், மோதிரம் மற்றும் தங்கலி எனப்படும் அணிகலன்களை அணிந்து கொள்கிறார்.
நடனத்தின் கருப்பொருள்
தொகுஓஜாபாலி நடனத்தின் கருப்பொருளாக, இராமாயணம், மகாபாரதத்தில் காணப்படும் சம்பவங்கள் உள்ளன. பொதுவாக தரங்கி சுக்னன்னி ஓஜாபாலி, சுகமா நாராயணதேவா எழுதிய பாடல்களை பத்மபுராணத்தில் பாடுகிறார். பத்ம புராணம் பாம்பு தெய்வம் மானசாவின் கதையை உள்ளடக்கியது.
ஓஜாபாலியின் வகைகள்
தொகுஓஜாபாலியை சந்தர்ப்பம் மற்றும் பாணியின் அடிப்படையில் மூன்று வடிவங்களாக பிரிக்கலாம்:
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇன்றைய ஓஜாபாலி நடனம், தரங், மங்கல்டோய், ஷிபாஜார், தேஜ்பூர் மற்றும் உதல்கூரி மாவட்டத்தின் வேறு சில பகுதிகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லலித் ஓஜா அல்லது லலித் சந்திரநாத் ஓஜா (1923 - 21 அக்டோபர் 2013) என பிரபலமாக அறியப்படும் லலித் சந்திரநாத் அசாமில் ஓஜாபாலி நடனத்திற்கு குறிப்பிடத்தக்க நபர் ஆவார். [4] இந்த நடனத்திற்காக, 1983 ஆம் ஆண்டில் இவருக்கு மதிப்புமிக்க சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. மீண்டும் 2012 இல் அதே அமைப்பு சுகனன்னி ஓஜாபாலியில் நிபுணத்துவம் பெற்றதற்காகவும், இந்த பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவத்தை பிரபலப்படுத்தியதற்காகவும் 'இரவீந்திரநாத் தாகூர் விருதை' வழங்கியது. இவர் இந்தியாவிலும் வெளியேயும் பல்வேறு இடங்களில் ஓஜாபாலி மற்றும் தியோதனி நடனத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த கலை வடிவத்தில் பங்களித்ததற்காக லலித் சந்திரநாத்தை தொடர்ந்து, கினாராம் நாத் என்பவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது லலித் சந்திரநாத் ஓஜாவின் குடும்பம் ஷிபாஜர் மாவட்டத்தில் ஓஜாபாலியின் வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருகிறது. [5] மேலும், ஓஜாபாலி நடனத்தில் புகழ்பெற்றவர்களாக விளங்கியவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
- மங்கா [6]
- துர்கபார் கயஸ்தா
- பிதாம்பர்
- பார்பியாஹு [7]
- சாருபியாஹு
- லலித் ஓஜா (சங்கீத நாடக அகாதமி விருது வென்றவர்) என்றும் அழைக்கப்படும் லலித் சந்திரநாத் [8]
- மங்கா [9]
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "Oja-Pali Assam | Oja-Pali Dance Of Assam | OjaPali Dance Of Assam | Traditional Dance Of Assam | Assamese Culture". Assaminfo.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ "Oja-Pali in India". India9.com. 2005-06-07. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ "Deodhani dance exponent Lalit Ojah dead". Assam Tribune. 21 October 2013 இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160127212249/http://www.assamtribune.com/scripts/mdetails.asp?id=oct2213%2Fstate07. பார்த்த நாள்: 22 January 2016.
- ↑ TI Trade. "Assam Tribune online". Assamtribune.com. Archived from the original on September 5, 2009. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
- ↑ [1] பரணிடப்பட்டது செப்டெம்பர் 5, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Fare, Eastern (2010-12-31). "North-East India | NE Blog: Ojapali – A performing art form of Assam". Neblog.in. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Artiste dedicated to oja pali, body and soul". Telegraphindia.com. 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2013-06-07.
- ↑ Debajit Bora (2016). "Politics of performance and the creation of Darangi identity:looking at the ojapali performance of Assam- Debajit Bora - Rouledge". Research in Drama Education: The Journal of Applied Theatre and Performance 21 (4): 465–470. doi:10.1080/13569783.2016.1220245.