ஓடுடைய கணுக்காலி
ஓடுடைய கணுக்காலி புதைப்படிவ காலம்:511–0 Ma கேம்பிரியக் காலம் to Recent | |
---|---|
![]() | |
Abludomelita obtusata, an amphipod | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குகள் |
தொகுதி: | கணுக்காலிகள் |
துணைத்தொகுதி: | ஓடுடைய இனங்கள் Brünnich, 1772 |
வகுப்புக்கள் & துணைவகுப்புக்கள் | |
ஓடுடைய கணுக்காலிகள் (Crustaceans) என்பவை மிகவும் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்ட கணுக்காலிகளாகும். இவை கணுக்காலி வகைகளில் மிகப்பெரிய குழுவாக இருக்கும் உயிரினங்கள் என்பதால், வகைப்பாட்டியலில் இவை ஒரு தனியான துணைத்தொகுதியாக உள்ளது. இதில் நண்டு, இறால், கல் இறால் போன்ற உயிரினங்கள் அடங்கும்.[1]
இவை ஏனைய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூட்டை விடவும் மிகக் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்டுள்ளமையால் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அத்துடன் இவற்றின் கால்கள் இரண்டாகப் பிரிந்தும், அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு பகுதியும், தனித்தனி வரிசையில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டுமிருக்கின்றன. ஏனைய கணுக்காலிகளின் கால்கள் இவ்வாறு இரண்டாகப் பிரியாமல் ஒரு வரிசையிலான ஒன்றுடனொன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டவையாக இருப்பதனால் ஓடுடைய இனங்களிலிருந்து வேறுபடுகின்றன.
மேற்கோள்கள்தொகு
- ↑ Calman, William Thomas (1911). "Crustacea". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. Cambridge University Press.