ஓட்டமாவடி

ஓட்டமாவடி (Oddamavadi) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு ஊர் ஆகும். மட்டக்களப்பு நகரில் இருந்து, 33 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இவ்வூர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று ஆறுகளில் ஒன்றான வாழைச்சேனை வாவியைக் கொண்டுள்ளது. பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் தமிழ்மொழியினைப் பேச்சு மொழியாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.[மேற்கோள் தேவை] இங்கு அமைந்துள்ள ஓட்டமாவடிப் பாலம் கிழக்கு வாழ் மக்களின் போக்குவரத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இங்கு பிரித்தானியர் காலத்தில் இரயில், ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்காக கட்டப்பட்ட பழைய பாலமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலமும் காணப்படுகின்றன.[1] புதிய பாலத்தின் நிர்மாணிப்பினை தொடர்ந்து, பழைய பாலம் இரயில் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுகின்றது.

ஓட்டமாவடி
ஓட்டமாவடிப் பாலம்
ஓட்டமாவடிப் பாலம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுகோறளைப்பற்று மேற்கு
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

குறிப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டமாவடி&oldid=2770481" இருந்து மீள்விக்கப்பட்டது