ஓட்ட விளக்கப்படம்

ஓட்ட விளக்கப்படம் (run chart) அல்லது தொடர்வரிசை-ஓட்ட விளக்கப்படம் (run-sequence chart) என்றழைக்கப்படும் வரைபடம் கண்டறியப்பட்ட தரவுகளை காலத்தொடர் வரிசையில் காட்டுகிறது. பெரும்பாலும் காட்டப்படும் தரவுகள் ஒரு உற்பத்தி அல்லது மற்ற தொழில் செயல்முறைகளின் வெளியீடு அல்லது செயல்திறன்களைப் பிரதிபலிக்கிறது.

எளிய ஓட்ட விளக்கப்படம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சேகரிக்கப்பட்ட தரவுகளை காட்டுகிறது. கண்டறியப்பட்ட தரவுகளின் மையக்கோடு (73)-ம் விளக்கப்படத்தில் காட்டப்படுகின்றது.

கண்ணோட்டம்

தொகு

தொடர்வரிசை-ஓட்ட விளக்கப்படம்[1] எளிதில் ஒருமாறிகளின் தரவு தொகுப்புகளை சுருக்கமாக வரைபடம் மூலம் விளக்குகிறது. ஒருமாறி தரவுத்தொகுப்புகளின் பொதுவான கற்பிதம் பின்வருவன போன்று இருக்கிறது:[2]

  • சீரற்ற வரைபடங்கள்;
  • ஒரு நிலையான பகிர்விலிருந்து;
  • ஒரு பொதுவான இடத்துடன்; மற்றும்
  • ஒரு பொதுவான அளவுடன்

தொடர்வரிசை-ஓட்ட விளக்கப்படமானது தரவுகளின் இடங்கள் மற்றும் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாக காட்டுகிறது, இதன் மூலம் தரவுகளில் ஏற்படும் வித்தியாசத்தினை எளிதில் கண்டறியமுடியும்.

ஓட்ட விளக்கப்படமானது, புள்ளியியல் செயல்முறைக் கட்டுப்பாட்டுகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாடு விளக்கப்படம்-தனை ஒத்திருக்கிறது. ஆனால் கட்டுப்பாடு வரம்புகளை கொண்டிருக்காது. இதனை உருவாக்குவது எளிது ஆனால் கட்டுப்பாடு விளக்கப்படத்தினைப் போன்று பகுப்பாய்வு நுட்பங்களின் பயன்களை முழுவதும் தருவதில்லை.

சான்றுகள்

தொகு
  1. Chambers, John; William Cleveland; Beat Kleiner; Paul Tukey (1983). Graphical Methods for Data Analysis. Duxbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-98052-X.
  2. NIST/SEMATECH (2003). "Run-Sequence Plot" In: e-Handbook of Statistical Methods 6/01/2003 (Date created).

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்ட_விளக்கப்படம்&oldid=3581448" இலிருந்து மீள்விக்கப்பட்டது