ஓப்பன் சோர்ஸ் (நூல்)
ஓப்பன் சோர்ஸ் (open source) ச. செந்தில் குமரன் எழுதிய கணினிக் கையேட்டு நூல் ஆகும். ஆசிரியர் இந்நூலை மிக எளிமையான நடையில் எழுதி இருக்கிறார். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை விலைகொடுத்து வாங்கினாலும், அதன் முழு சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. இதற்கு மாற்றாக அமைந்தது தான் ஓப்பன் சோர்ஸ். இதில் நிரலை அனைவரும் பார்க்க, படிக்க, மாற்ற, மாற்றத்துடன் விற்க இயலும். இதில் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து மென்பொருளும் அடங்கும். இதற்கு இணையாக கட்டற்ற மென்பொருளும் அதன் வேறுபாடுகளை விளக்குகிறது.
நூலாசிரியர் | ச. செந்தில் குமரன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | கணினிப் பொறியியல் கையேடு |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2011 |
இந்நூல், ஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், மென்பொருளின் பலன்கள் என பல்வேறு தகவல்களைத் தருகின்றது.
இணைப்புகள்
தொகு- ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம் பரணிடப்பட்டது 2014-04-27 at the வந்தவழி இயந்திரம்