ஓமாட்சி கிராமம்

ஓமாட்சி கிராமம் என்பது இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட இன்றைய களக்குடி என்று அழைக்கப்பட்டு வரும் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில்தான் பார்வதி தாய் ஓமாட்சி காளியாக அவதாரம் எடுத்துள்ளார் என்பது புராண வரலாறு.

ஓமாட்சிகாளியாக அவதாரம் எடுத்த மங்களேஸ்வரி

தொகு

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களேஸ்வரி ஆலயம் உலக புகழ்பெற்ற ஒரு ஆண்மிகதளம் ஆகும், இந்த தளத்தில் சிவபெருமானும் உமாதேவியும் தங்களது ரிஷப வாகனத்தில் ஆகாய மார்க்காக பறந்து தங்களது ஊரான உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தென்னாட்டை சுற்றிப்பார்த்த நிகழ்ச்சிகளைப் பற்றி மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உமாதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினார். இதனால் தென்னாடு இருண்டு போனது.

தென்னாட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் கண்தெரியாமல் இருப்பிடம் இன்றி, உணவின்றி, பசியும் பட்டினியாக கிடக்க நேரிட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன் மனைவி என்றும் பாராமல் பார்வதி தேவியை கருப்பு நிற ஓமாட்சி காளியாக போ என்று சாபமிடுகின்றார். சிவபெருமான் தன்னை சாபத்துக்கு உள்ளாக்கியதை அறிந்த பார்வதி தன் விசுவரூபத்தைக் காட்டி கோபம் கொண்டு சிவபெருமானை உத்திரகோச மங்கை திருத்தலத்தில் நடனச்சாலையில் நடனமாட போட்டிக்கு அழைத்தாள்.

இந்த நடனப்போட்டியில் நான் தோற்றால் காளியாகப் போக சம்மதிக்கிறேன் என்றாள். இதையடுத்து சிவனும், பார்வதியும் உத்தரகோச மங்கை திருத்தலத்தில் உள்ள நாட்டிய சாலையில் நடன போட்டியைத் தொடங்கினார்கள். நடனப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டி நடனத்துக்கு திருமால், பிரம்மன், இந்திரன் முதலியோர் தீர்ப்பு கூறும் நடுவர்களாக இருந்தார்கள். சிவன், பார்வதி நடனத்தை கண்டுகளிப்பதற்கு வேண்டி சொர்க்கலோக வாசிகளும், பூலோகவாசிகளும் மற்றும் உயிரினங்களும் கூட்டம் கூட்டமாக உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் கூடினார்கள்.

வீரக்குடும்பர் சுவாமிகள் என்பவர் திரு உத்திரகோசமங்கையில் சித்தராக அவதரித்தவர் இவர் பிறந்த ஊரும் ஓமட்சி கிராமம் என்று கூறபடுகிறது, இந்த கிராமத்தில் பொது மக்கள்  நடுகல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

ருத்ராட்ச மரம்

தொகு

இந்த ஓமாட்சி கிராமத்தில் நைனார் ஆலயம் ஒன்றில்  ஒரு ருத்ராட்சம் மரம் ஒன்று வளர்ந்து வருகிறது இங்குதான் வீரக்குடும்பர் சுவாமிகள் தவம் இருந்ததாக வரலாறும் மக்களும் கூறிவருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமாட்சி_கிராமம்&oldid=3457140" இலிருந்து மீள்விக்கப்பட்டது