ஓமாலிகை என்பது மருத்துவக் குணமுள்ளதும், மேனிக்கு மணமூட்டுவதுமான பொருள்கள். மாதவி இந்திர விழாவில் பதினோராடல் முதலான ஆடல்களை அரங்கில் ஆடினாள். இதனைப் பலரும் பார்க்கும்படி ஆடினாள் என்று கோவலன் மாதவியோடு ஊடல் கொண்டிருந்தான். கோவலனின் ஊடலைப் போக்கத் தன் மேனியில் மணம் கமழும்படி ஒப்பனை செய்துகொண்டாள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. துவர் (பத்து), மணப்பொருள் (ஐந்து), முப்பத்து இரண்டு வகை ஓமாலிகை ஆகியவை கலந்த மணநீரில் மாதவியை நீராட்டினார்களாம். [1]

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் மேற்கோள் பாடல் ஒன்றைத் தந்து 32 வகையான ஓமாலிகைகள் இவை எனக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடலில் 32 ஓமாலிகைப் பொருள்கள் இவை இவை என உணர்ந்துகொள்ளலாம். [2]

மேற்கோள் தொகு

  1. பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
    முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,
    ஊறின நல் நீர், உரைத்த நெய் வாச,
    நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி; - கடலாடு காதை

  2. இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம்,
    குலவி நாகணங் கொட்டம் - நிலவிய,
    நாக மதாவரிசி தக்கோல நன்னாரி
    வேகமில் வெண்கோட்ட மேவுசீர் - போகாத,
    கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய்,
    ஒத்தகடு நெல்லி யுயர்தான்றி - துத்தமொடு,
    வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன்,
    எண்ணுஞ் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும்,
    புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம்,
    பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும்,
    பதுமுக நுண்ணேலம் பைங்கொடு வேரி,
    கதிர்நகையா யோமாலி கை"

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமாலிகை&oldid=2572132" இலிருந்து மீள்விக்கப்பட்டது