பதினோராடல்
பதினோராடல் என்பது தமிழ் கடவுள்கள் ஆடிய பதினொன்று வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.[1] தெய்வம் பல்வேறு உருவம் கொண்டு ஆடியதாகச் சில கதைத்திற ஆட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன.[2] சிலப்பதிகாரம் மாதவி இப்பதினோரு வகையான ஆட்டங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறுகிறது.
தொகுப்புப் பட்டியல்
தொகுஆடல் | தெய்வம் | இக்காலத்தில் ஆடப்படும் பாங்கு |
---|---|---|
கொடுகொட்டி | சிவன் | பறை முழக்கத்துடன் பல்வேறு உருவில் தோன்றி ஆடுதல் [3] |
பாண்டரங்கம் | சிவன் | (முப்புரம் எரித்த) சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடுதல் [3] |
பாவைக்கூத்து | திருமகள் | இக்காலப் பொம்மலாட்டம் |
குடக்கூத்து | திருமால் | குடத்தை இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றும் வைத்துக்கொண்டு ஆடும் கரகாட்டம் |
மல்லாடல் | திருமால் | மற்போர் |
ஆனந்த தாண்டவம் (அல்லியம் (மதம்)) | கண்ணன் | அல்லிக்கொடி போல் அசைந்தாடும் பரதநாட்டியம் |
குடைக்கூத்து | முருகன் | காவடி |
துடியாடல் | முருகன் | உடுக்கை |
கடையம் (ஆடல்) | இந்திராணி (அயிராவத யாணை தெய்வாணை) | உழத்தியர் ஆட்டம் |
மரக்காலாட்டம் | துர்க்கை | பொய்க்கால் குதிரை ஆட்டம் போல, ஆனால், குதிரை இல்லாமல் ஆடல் |
பேடிக்கூத்து | காமன் | காமன்-ரதி காமாண்டி ஆட்டம் |
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ முனைவர். தமிழப்பன் எழுதிய ”தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” நூலின் பின் இணைப்புப் பகுதியில் பக்கம் 13-இல் உள்ள சா. கணேசன் எழுதிய பல்தொகை விவரம்.
- ↑ சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த்தொகுதி, பாடல் 50, 51
- ↑ 3.0 3.1 கலித்தொகை - கடவுள் வாழ்த்து