ஓமிலைட்டு

நெசோசிலிக்கேட்டு கனிமம்

ஓமிலைட்டு (Homilite) என்பது Ca2(Fe,Mg)B2Si2O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கடோலினைட்டு தொகுதி கனிமங்களில் ஒரு போரோ சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.

பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறைகளில் பெல்டுசுபார் பொதிகளில் பழுப்பு நிறத்தில் ஒற்றைச் சாய்வுப் படிகங்களாக ஓமிலைட்டு கனிமம் காணப்படுகிறது. நார்வே நாட்டின் சுடோக்கோ தீவில் 1876 ஆம் ஆண்டு ஓமிலைட்டு கண்டறியப்பட்டது. மெலிபேனைட்டு மற்றும் அல்லேனைட்டு கனிமங்களுடன் சேர்ந்து இது கானப்படுகிறது. கிரேக்க மொழியில் ஒன்றாகத் தோன்றுதல் என்ற பொருள் கொண்ட சொல்லிலிருந்து இக்கனிமத்திற்கான பெயர் வரப்பெற்றுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமிலைட்டு&oldid=3237455" இலிருந்து மீள்விக்கப்பட்டது