ஓம் பிரகாசு ஆதித்யா
ஓம் பிரகாசு ஆதித்யா (Om Prakash Aditya)(5 நவம்பர் 1936 - 8 சூன் 2009) என்பவர் புகழ்பெற்ற இந்தி கவிஞர் மற்றும் நையாண்டி கலைஞர் ஆவார். இவர் இந்தி கவி சம்மேளனத்தின் புகழ்பெற்ற கவிஞரும் ஆவார். இவர் நகைச்சுவை மற்றும் நையாண்டி கவிதைகளுக்காகப் பரவலாக அறியப்பட்டார்.[1] "கோரி பெத்தி சாட் பர்", "இதர் பி காதே ஹைன், உதர் பி கதே ஹைன்", "தோட்டா அண்ட் மைனா" ஆகியவை இவரது புகழ்பெற்ற கவிதைகளில் சில. நவீன இந்தி இலக்கியத்தில் கவிதா சந்தைப் பயன்படுத்தி கவிதைகளைச் சொல்லும் சில கவிஞர்களில் இவரும் ஒருவர். பண்டைய காலங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு கவிஞரின் ஒரு பகுதியாக இருந்த சந்தம், இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. எல்லாக் கவிதைகளிலும் சந்தத்தினைப் பயன்படுத்திய மிகச் சில கவிஞர்களில் ஆதித்யாவும் ஒருவர்.
ஓம் பிரகாசு ஆதித்யா | |
---|---|
பிறப்பு | 5 நவம்பர் 1936 குருகிராமம், அரியானா, இந்தியா |
இறப்பு | 8 சூன் 2009 போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா |
அறியப்படுவது | சந்தம், ஹாஸ்ய கவிதைகள் |
கம்பிவடத்-தொலைக்காட்சிக்கு முந்தைய காலத்தின் இவருடைய தயாரிப்பு, 1970கள் மற்றும் 1980களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ஹாஸ்ய கவி சம்மேளனத்தின் மூலம் புகழ் பெற்றார்.
தில்லியில் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே வாகன விபத்தில் உயிரிழந்தார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.shazam.com/track/247007848/comedy-gurus-hindi-om-prakash-aditya
- ↑ "Hindi poet Om Prakash Aditya killed in accident". Sakaal Times. 8 June 2009 இம் மூலத்தில் இருந்து 19 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090619044017/http://www.sakaaltimes.com/2009/06/08105658/Hindi-poet-Om-Prakash-Aditya-k.html. பார்த்த நாள்: 9 June 2009.
- ↑ "Three Hindi poets killed in accident". The Hindu. 9 June 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/Three-Hindi-poets-killed-in-accident/article16573784.ece. பார்த்த நாள்: 26 January 2017.