ஓரகத் தனிமங்களின் பயன்பாடுகள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஓரிடத்தான் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
ஒரே தனிமத்தின்(Element) வெவ்வேறு அணு பொருண்மை (Atomic mass) கொண்ட வெவ்வேறு வகைகள் ஓரகத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பயன்பாடுகள்
தொகுஓரகத் தனிமங்கள் அவற்றின் சிறப்புப் பண்புகளின் காரணமாகப் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. குறிப்பாக, அவற்றின் வேதிப்பண்புகளும் அவற்றின் உட்கருப் பண்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.
ஓரிமத்தனிம அடையாளமிடல் (isotopic labelling)
தொகுமிகச் சாதாரணமாகப் பயன்பாடுகளில் முக்கியமானது ஓரிமத்தனிம அடையாளமிடல் (isotopic labelling) அசாதாரணமான ஓரகத் தனிமங்கள் அல்லது கதிரியக்க ஓரகத் தனிமங்கள் வேதி எதிர் வினைகளில் சுவடைகளாகவோ (tracers)குறிஞன்களாகவோ (markers)பயன்படுத்தப்படுகின்றன.
கதிரியக்க ஒரகத் தனிம அடையாளமிடல் (radioisotopic labelling)
தொகுபொதுவாக ஒரு தனிமத்தின் அணுக்களை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரித்தறிய முடியாது. எனினும், வெவ்வேறு பொருண்மை கொண்ட நிலையான ஓரகத் தனிமங்களைப் பயன்படுத்தும்போது, அவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றாக பொருண்மை நிற நிரல் ஒளி அளவையியல் (mass spectrometry)அல்லது அகச்சிவப்பு (infrared)நிற நிரலியல் மூலம் பிரித்தறிய முடியும். கதிரியக்க ஓரகத் தனிமங்களைப் பயன்படுத்தும்போது, அவற்றினை அவை உமிழும் கதிரியகத்தின் மூலம் கண்டறியலாம். இது கதிரியக்க ஒரகத் தனிம அடையாளமிடல் (radiosiotopic labelling).
கதிரியக்கப்படமெடுப்பு (autoradiography)
தொகுஇம்முறையைப் பயன்படுத்தும்போது உமிழப்படும் கதிரியக்கத்தைக் கண்டறிய கீகர்-முல்லர் எண்ணியும் (Geiger - Muller counter) மிளிர்வொளி வெண்ணியும் (scintillating counter) பயன்படுத்தப்படுகின்றன. திசுவில் கதிரியக்க ஓரகத் தனிம அடையாளமிடல் செய்யப்பட்டிருந்தால் அவற்றிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தைக் கண்டறிய கதிரியக்கப்படமெடுப்பு (autoradiography) முறை பயன்படுத்தப்படுகிறது.
சுவடைகள்(tracers)
தொகுகதிரியக்க ஓரகத் தனிமங்கள் ஒருசில (எடுத்துக்காட்டாக, கார்பன்) தாவர வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை கண்டறியும் சுவடைகளாக (tracers)பயன்படுத்தப்படுகின்றன. வேர்மூலம் நீரின் வழி உறிஞ்சப்பட்ட தனிமங்களும், இலையால் உண்டாக்கப்பட்ட உணவுப் பொருட்களும் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதைச் சுவடைகளைப் பயன்படுத்தி எளிதில் அறியலாம்.
கதிரியக்கக் காலகணிப்பீடு (radiometric dating)
தொகுஓரகத் தனிமங்களின் கதிரியக்கம் தொடர்பான மற்றொரு தொழில்நுட்பம் (technique) கதிரியக்கக் காலகணிப்பீடு (radiometric dating) ஆகும். ஒரு தனிமத்தின் நிலையற்ற ஓரகத்தனிமத்தின் தெரிந்த அரைவாழ்க்கை(half life) பண்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாறை அல்லது தொல்லுயிர் எச்சத்தின் வயதை ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டறியலாம்.
மேற்கோள்கள்
தொகுஆய்வகச் சோதனை முறைகளும் கருவிகளின் செயல்பாடுகளும், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.