ஓரங்க நாடகம்
ஓரங்க நாடகம் (one-act-play) என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடகம் ஆகும். ஓரங்க நாடகங்களில் ஒரு காட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் அடங்கி ஒரு நாடகம் உருவாகலாம். 20 முதல் 40 மணித்துளிகலில் நடைபெரும் இந்தவகை நாடகம் எழுத்துப் போட்டிகளில் உருவாகிய நாடக வடிவமாகும். இது சிறு விழாக்களுக்கு ஏற்ற நாடகமாகும்.
பண்டைய கிரேக்கத்தில், "சைக்ளோப்ஸ்" என்ற எள்ளல்வகை ஓரங்க நாடகத்தை யூரிபீடிசு இயற்றியுள்ளார். [1] இது பல்லங்க நாடகங்களுக்குப் பிறகே உருவாகியது. மோலியரும் கால்டெரானும் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஓரங்க நாடகங்களை உருவாக்கியுள்ளனர்.[2] இது 19 ஆம் நூற்றாண்டில் பொது வழக்குக்கு வந்தது. இக்காலத்தில் இது சிற்றரங்குகளிலும், சிறு விழாக்களிலும் தெரு நாடகங்களிலும் இடம்பெறும் நாடகமாகும்.