ஓரினயீனோலேட்டுகள்
ஓரினயீனோலேட்டுகள் (Homoenolates) என்பவை வேதிவினைக் குழுக்களின் ஒரு வகையாகும். 1980 ஆம் ஆண்டுகள் முதல் இவை செயற்கை கரிம வேதியியலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஈனோலேட்டுகளுடன் தொடர்பு கொண்டவையாகும். ஈனோலேட்டுகளின் தலைகீழ்முனைவாக்க வினைத்திறனை இவை குறிக்கின்றன. இலித்தியம், இரும்பு, வெள்ளி, ஈயம், தைட்டானியம், தெலூரியம் , சிர்க்கோனியம், நையோபியம், பாதரசம், வெள்ளீயம், துத்தநாகம், ஆண்டிமனி, பிசுமத், நிக்கல், பலேடியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட பல்வேறு உலோக எதிர்மின்னிகளைக் கொண்டு ஓரினயீனோலேட்டுகளை உருவாகலாம். ஓரினயீனோலேட்டுகளின் நிலைப்புத்தன்மை மற்றும் வினைத்திறன் எதிர்மின்னிகளின் அடையாளம் மற்றும் அருகிலுள்ள பிற வேதி வினைக்குழுக்களால் மாறுபடும். முதனிலை-உலோகநீக்கம், β-ஐதரைடு நீக்கம் ஆகியவை இவற்றின் சிதைவுக்கான பொதுவான பாதைகளாகும். ஓரினயீனோலேட்டுகள் மற்றும் அவற்றின் வினைத்திறன் என்ற தலைப்பில் பல மதிப்புரைகள் வெளியிடப்பட்டுள்ளன.[1][2][3][4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hoppe, Dieter (1 December 1984). "The Homoaldol Reaction, or How to Overcome Problems of Regio- and Stereo-selectivity". Angewandte Chemie International Edition (Wiley) 23 (12): 932–948. doi:10.1002/anie.198409321. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833.
- ↑ Isao, Kuwajima; Eiichi, Nakamura (1990). "Metal Homoenolates from Siloxycyclopropanes". Topics Curr Chem 155. https://www.uwindsor.ca/people/jgreen/sites/uwindsor.ca.people.jgreen/files/top-curr-chem-1990-155-1-kuwajima.pdf.
- ↑ Crimmins, M. T.; Nantermet, P. G. (1993). "Homoenolates and Other Functionalized Organometallics. A Review". Organic Preparations and Procedures International 25: 41–81. doi:10.1080/00304949309457932.
- ↑ Menon, R. S.; Biju, A. T.; Nair, V. (7 August 2015). "Recent Advances in Employing Homoenolates Generated by N-heterocyclic Carbene (NHC) Catalysis in Carbon-Carbon Bond-Forming Reactions". Chemical Society Reviews 44 (15): 5040–5052. doi:10.1039/c5cs00162e. பப்மெட்:26014054.
- ↑ Nikolaev, A.; Orellana, A. (2016). "Transition-Metal-Catalyzed C–C and C–X Bond-Forming Reactions Using Cyclopropanols". Synthesis 48 (12): 1741–1768. doi:10.1055/s-0035-1560442.
- ↑ Mills, L. R.; Rousseaux, S. A. L. (2019). "Modern Developments in the Chemistry of Homoenolates". European Journal of Organic Chemistry 2019: 6–26. doi:10.1002/ejoc.201801312.