ஓருறுப்புச் செயலி

கணிதத்தில் ஓருறுப்புச் செயலி அல்லது ஓருறுப்புச் செயல் (unary operation) என்பது, ஒரேயொரு உறுப்பைக் கொண்டு செய்யப்படும் செயலியாகும். அதாவது இச் செயலிக்கு ஒரேயொரு உள்ளீடுதான் தரப்படும். குறிப்பாக சார்புகள் ஓருறுப்புச் செயலிகள் ஆகும். சார்பு (A ஒரு கணம்), A இன் மீது வரையறுக்கப்பட்ட ஓருறுப்புச் செயலி.

எடுத்துக்காட்டுகள்

தொகு

சில ஓருறுப்புச் செயலிகள் கீழே தரப்பட்டுள்ளன:

  • எதிர்மமாக்கல்

இச்செயலானது ஒரேயொரு எண்ணின் எதிர்ம மதிப்பைக் காண்பதற்குப் பயன்படுகிறது.

 
 

  இன் சுருக்கப்பட்ட வடிவமான   உம், எதிர்மமாக்கல் செயலும் ஒன்றானவை அல்ல.

  • நேர்மமம் எதிர்மமும்

ஓர் எண்ணை நேர்மமாக்கல் (+) மற்றும் எதிர்மமாக்கல் (-) ஆகிய இரு செயலிகளும் ஓருறுப்புச் செயலிகளாகும்.

(+2) = 2
(+(−2)) = −2
(−(−2)) = +2
(-(+2)) = -2

இரண்டுக்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ள ஒரு கணிதக் கூற்றில், ஒரு உள்ளீடு மட்டும் கொண்டுள்ளதால், ஓருறுப்புச் செயலியே முதலில் செய்யப்படல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:

3 − −2 இத்தொடரில் இடமிருந்து முதலில் வரும் - குறி ஈருறுப்புச் செயலி; இரண்டாவது வரும் - ஓருறுப்புச் செயலி. எனவே இதன் மதிப்புகாண பின்பற்றப்படவேண்டிய வரிசைமுறை:
3 − (−2) = 3 + 2 =5
  • இடமாற்று அணிகாணல்

ஒரு அணியின் இடமாற்று அணி காண்பது ஓருறுப்புச் செயல்.

அணி A இன் இடமாற்று அணி AT

எடுத்துக்காட்டு: A =  

இதனுடைய இடமாற்று அணி

AT =  

வர்க்கமூலம் காணல், வர்க்கம் காணல், தொடர் பெருக்கம் காணல் ஆகியவையும் ஓருறுப்புச் செயலிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

  • முக்கோணவியல் சார்புகள்

முக்கோணவியலில்  ,  ,   போன்ற முக்கோணவியல் சார்புகள் ஓருறுப்புச் செயலிகளாகும். ஏனெனில் இச்சார்புகளில் ஒரேயொரு தருமதிப்பை இட்டு அதற்குரிய பெறுமதிப்பைக் காண இயலும். மாறாக கணித்ததின் கூட்டல் போன்ற ஈருறுப்புச் செயலிகளுக்கு இரண்டு உள்ளீடுகள் தேவைப்படுகிறது.

  • தனிமதிப்பு காணல்

ஒரு எண்ணின் தனி மதிப்பு காணும் செயல், ஓருறுப்புச் செயலாகும்.

 [1]

இங்கு   என்ற குறியீடு   இன் தனிமதிப்பைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Absolute value".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓருறுப்புச்_செயலி&oldid=3831517" இலிருந்து மீள்விக்கப்பட்டது