ஓர்டா
ஓர்டா (ஓர்டு[1],ஓர்டோ, அல்லது ஓர்டன்) அல்லது ஹோர்டே ஐரோவாசியாவின் புல்வெளிகளில் காணப்படும் வரலாற்று சமூகவியல் மற்றும் இராணுவ அமைப்பு ஆகும். இது பொதுவாக துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களுடன் தொடர்புடையது. இந்த அமைப்பு மண்டல அளவில் ஒரு குலம் அல்லது ஒரு மக்கட்குழுவுக்குச் சமமான கருதப்படுகிறது. சில வெற்றிகரமான ஓர்டாக்கள் கானேடுகளாக மாறின.
ஓர்டோ என்ற துருக்கிய வார்த்தைக்கு “முகாம், தலைமையகம்” என்று பொருள். இதிலிருந்தே சிலாவிக் வார்த்தையான ஒர்டோ மற்றும் மேற்கத்திய வார்த்தையான ஹோர்டே தோன்றின. எனினும் இதன் உண்மையான பொருள் தங்க நாடோடிக் கூட்டம் போன்ற கானேட்டைக் குறித்தது கிடையாது. இந்த கட்டமைப்புகள் உளூஸ் ("நாடு" அல்லது "பழங்குடி") என்று அழைக்கப்பட்டன.
கடைசி மத்திய காலங்களில் மட்டுமே இந்த ஓர்டா என்ற சிலாவியப் பயன்பாடு துருக்கிய மொழிகளுக்குத் திரும்பியது. இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் மொழிகளுள் ஒன்றான உருது இந்தத் துருக்கியச் சொல்லிலிருந்தே பெறப்பட்டது.[2]