ஓலை வலை மீன்பிடி
ஓலை வலை மீன்பிடி முறை என்பது இந்தியாவில் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலோர பகுதியான இராமேசுவரம் மக்களால் பாரம்பரியமாக உணவுத்தேவைக்காகவும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்காகவும் மீன்களைப் பிடிக்கும் முறையாகும். இத்தொழில் பெரும்பாலும் அழிந்துவிட்டது. ஆனால் இப்பகுதிமக்கள் இத் தொழிலை இன்னமும் உயிர்ப்புடன் காத்துவருகிறார்கள்.[1]
மீன்பிடிப்பகுதி
தொகுஇத்தொழில் நடக்கும் பிரதானமான இடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடல்பகுதி ஊரான இராமேசுவரத்திற்கு அருகில் அமைந்துள்ள மன்னார் வளைகுடாவும், பாக் சலசந்தியும் உள்ள கடல் பகுதி ஆகும். இத்தொழில் முறை இலங்கைக் கடல் பகுதியிலும் நடைமுறையில் உள்ளது.
சூழ்நிலை பாதிப்பு
தொகுகோல் இழுவலை, அடிமட்ட பலகை இழுவலை, மிதவை இழுவலை, சூழ்வலை, மற்றும் சுருக்கு வலை போன்றவற்றால் சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்படுவதை உணர்ந்த இப்பகுதிமக்கள் ஓலை வலை மீன்பிடி முறையை மட்டும் தொடர முடிவு செய்துள்ளார்கள்.
முறை
தொகுஇந்த வகையில் மீன்களைப்பிடிக்கும் பெண்கள் கடலில் கழுத்தளவு நீரில் மூன்று பெண்கள் நின்றுகொண்டு யூ (U) வடிவ வலையை கடலில் போட்டுப் பின்னர் ஓ (O) வடிவமாக ஆகச்செய்து மீன்களைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு மூன்று பெண்கள் தேவைப்படுகிறார்கள். ஆட்கள் அதிகமானால் கயிற்றின் அளவு நீளமாகக் கூட்டப்பட வேண்டும். இவ்வகையான மீன்பிடி முறைக்கு அதிக முதலீடு தேவையில்லை. முதலாளித்துவ முறை இத்தொழிலில் கிடையாது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ‘ஏலே லம்பா ஏலே’ நாட்டுப்புறப் பாடலுடன் பாரம்பரிய ஓலை வலை மீன்பிடி முறையை பாதுகாக்கும் பெண்கள்செப்டம்பர் 5 2016 தி இந்து தமிழ்