ஓஸ்கே யாகிசு

ஓஸ்கே யாகிசு (Özge Yağız) (பிறப்பு: 10 ஏப்ரல் 1997) என்பவர் துருக்கிய நாட்டு தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு 'அடேனி சென் கோய்' என்ற தொடர் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு யெமின் என்ற தொடரில் கதாநாயகியாக 'ரெய்ஹான்' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் புகழையும் கொடுத்தது.

ஓஸ்கே யாகிசு
பிறப்பு10 ஏப்ரல் 1997 (1997-04-10) (அகவை 26)
இசுதான்புல், துருக்கி
தேசியம்துருக்கர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017–இன்று வரை

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

ஓஸ்கே யாகிசு 10 ஏப்ரல் 1997 இல் துருக்கியில் இசுதான்புல் நகரில் பிறந்தார்.[1] இவர் தனது கல்வியை பாக்கன்ட் பல்கலைக்கழகத்தில் தொடர்பு அறிவியலில் பட்டம் பெற்றார்.[2] 2017 ஆம் ஆண்டு 'அடேனி சென் கோய்' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார், அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு யெமின் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார்.[3] இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகர் கோக்பெர்க் திமிர்சி என்பவர் நடித்தார். இருவரின் நடிப்பு பலரால் விருப்பப்பட்டது. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு 'சொல் யனிம்' என்ற தொடரில் சீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[4][5][6]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓஸ்கே_யாகிசு&oldid=3708259" இருந்து மீள்விக்கப்பட்டது