யெமின் (தொலைக்காட்சித் தொடர்)

யெமின் (Yemin /சத்தியம்) என்பது 18 பெப்ரவரி 2019 முதல் 6 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை கனால் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான துருக்கிய தொலைக்காட்சி நாடகத்த் தொடர் ஆகும். இந்த தொடருக்கு நஸ்மியா அல்மாஸ் என்பவர் திரைக்கதை எழுத, ஹகான் அர்ஸ்லான் மற்றும் ரெய்ஹான் பெகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த தொடர் ஹகான் அர்ஸ்லான் மற்றும் ரெய்ஹான் பெகர் ஆகியோர் இயக்கத்தில், நஸ்மியா அல்மாஸ் என்பவர் திரைக்கதை எழுத்தில், ஓஸ்கே யாகிசு மற்றும் கோக்பெர்க் திமிர்சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1] இந்த தொடர் மூன்று பருவங்களாக ஒளிபரப்பாகி 350 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

யெமின்
Yemin
வகைகாதல்
நாடகத் தொடர்
எழுத்துநஸ்மியா அல்மாஸ்
இயக்கம்ஹகான் அர்ஸ்லான் (1-2)
ரெய்ஹான் பெகர் (3)
நடிப்புஓஸ்கே யாகிசு
கோக்பெர்க் திமிர்சி
யக்மூர் சஹ்பசோவா
கேன் வேரில்
நாடுதுருக்கி
மொழிதுருக்கியம்
பருவங்கள்3
அத்தியாயங்கள்350
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 60–70 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகனால் 7
ஒளிபரப்பான காலம்18 பெப்ரவரி 2019 (2019-02-18) –
6 ஏப்ரல் 2021 (2021-28-06)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் எம்எக்ஸ் பிளேயர் என்ற ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.[2][3]

கதை தொகு

பருவம் 1 தொகு

ஹிக்மெட் என்பவர் மிகசிறந்த மனிதர் மற்றும் தொழிலதிபர் ஆனால் தனது கட்டுப்பாட்டில் இருக்காதா மகன் எமிரை நல்வழிப்படுத்த அவரது தங்கை மகளான ரெய்ஹானை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ரெய்ஹான் தாயை இழந்து விட்டு தனியாக வாழ்கிறாள். அவளுக்கு அந்நியரை திருமணம் செய்ய விரும்பவில்லை, அதே தருணம் எமிர் தனது சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதால் தற்பொழுது திருமணத்தில் விருப்பவில்லை ஆனால் அவரது தந்தையின் கட்டாயத்தால் திருமணம் செய்கிறான். அதே தருணம் ரெய்ஹான் தனது மாமா நோயைப் பற்றி அறிந்து அவரின் சத்தியத்தின் கீழ் எமிரை திருமணம் செய்கிறாள். பணத்திற்க்காக தான் தன்னை திருமணம் செய்தால் என எமிர் நினைத்து ரெய்ஹானிடம் விவாகரத்து கேட்கும் எமிர், அதை தர மறுப்பதால் இருவருக்கும் மன கசப்பு. அவளை மிகவும் மோசமாக நடத்துகிறான்.

இந்த திருமணத்தை விரும்பாத எமிரின் தாய் யாவிதா மற்றும் எமிரை காதலிக்கும் நண்பி செம்ரே இருவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர்களை பிரிக்க பல சதி செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் ரெய்ஹான் அவமானப்படுத்தப்படுகிறாள். நாட்கள் போக போக எமிருக்கு ரெய்ஹான் மீது காதல் வருகின்றது. ரெய்ஹானும் எமிரும் ஒருவருக்கொருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் செம்ரேவின் சதியால் ரெய்ஹான் எமிரை விட்டு வெளியிருக்கிறாள். அவள் போகும் பொது ஏன் எமிரை திருமணம் செய்தால் என்ற ரகசியத்தை சொல்லிவிட்டு செல்கிறாள்.

பருவம் 2 தொகு

இந்த பருவத்தில் ரெய்ஹான் எமிரை பற்றி தவறாக புரிந்து கொண்டு அவனை விட்டு வெளியேறுகிறார். ஆனால் இந்த பிரிவால் இருவரும் ஒருவருக்கொருவர் வருத்தப்பட்டனர். ஒரு நாள் ரெய்ஹானை எமிர் சந்திக்கும் பொது இருவருக்கும் கருத்து வேறு பாட்டால் ரெய்ஹான் எமிரை கன்னத்தில் அறைகிறாள். அந்த கோபத்துடன் செல்லும் பொது வாகன விபத்து ஏற்டபடுகிறது. அதில் அவன் படுகாயம் அடைகிறான். அப்போது எமிரின் சித்தப்பா கெமல் மூலமாக அவன் மீது எந்த தவறும் இல்லை என தெரியவருகிறது. அதனால் தனது தவறை புரிந்து கொண்டு மீண்டும் எமிர் வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் அவளை வெறுத்து ஒதுக்கும் எமிர் அதையும் தாண்டி தனது காதலுக்காக தங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்த்து சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

நாட்கள் செல்லச் செல்ல செம்ரே எமிருக்கு எதிராக ஒரு போலி காணொளியை உருவாக்கி, எமிரை விவாகரத்து செய்யுமாறு ரெய்ஹானை மிரட்டினார். ரெய்ஹான் எமிரை காப்பாற்றுவதற்க்காக விவாகரத்து செய்கிறார். இதனால் எமிர் மீண்டும் மனம் உடைந்து ரெய்ஹானை வெறுத்தான். அதே தருணம் எமிரின் தந்தை ஹிக்மெட் அவரது மனைவின் சூழ்ச்சியால் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கின்றார். அவரை பார்த்துகொல்வதற்காக மீண்டும் அந்த வீட்டுக்கு வரும் ரெய்ஹான். இதை கொன்சமும் விரும்பாத எமிர் தந்தையின் உடல் நிலை கருதி அவளை தங்க அனுமதிக்கிறான். அவளை வெறுத்து ஒரு வீட்டு பணிப்பெண் போன்றே நடத்தி வந்தான் எமிர்.

இதே தருணம் செம்ரேயின் தாய் சுஹெய்லா தனது மகள் செம்ரே, எமிர் மற்றும் ரெய்ஹானுக்கு எதிராக சதி திட்டங்ககலள அறிந்து கொள்கின்றார். இதைப்பற்றி எல்லாவற்றையும் எமிரிடம் சொல்ல முடிவு செய்தாள், ஆனால் அவர் ஒரு காரில் அடிபட்டு கொல்லப்பட்டாள். பல நாட்களுக்குப் பிறகு, எமிர் இறுதியாக போலி காணொளியைப் பார்த்து, செம்ரே கைது செய்யப்பட்டார். அவள் எல்லாவற்றையும் இழந்துவிட்டாள் என்று நினைத்து, செம்ரே தற்கொலைக்கு முயன்றாள், ஆனால் அவள் உயிர் பிழைத்து, மருத்துவமனையில் இருந்து தப்பித்து சுனாவை கடத்தி மீண்டும் எமிர் மற்றும் ரெய்ஹானை எபழி வாங்க நினைத்தால். அவள் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக பைத்தியம் பிடித்துவிட்டாள் போன்று கட்டிக்கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல ரெய்ஹான் கற்பமாகின்றாள். ஆனால் அவளுக்கு குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் இருந்தது, அதையும் தாண்டி இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது. சந்தோசமாக சென்ற வாழ்க்கையில் சிலரின் சதியால் ரெய்ஹான் துப்பாகியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இத்துடன் பருவம் இரண்டு முடிவடைகிறது.

பருவம் 3 தொகு

இந்த பருவத்தில் ரெய்ஹான் இறந்துவிட்டார். இதனால் எமிர் தனது குழந்தையை பார்க்க விரும்பவில்லை. ஹிக்மெட் இப்போது உடல் நிலை குணமாகி நன்றாக இருக்கிறார், எமிர் தனது மகனை நேசிக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். யாவிதன் தற்பொழுது சிறையில் இருக்கிறாள், அவருடைய எல்லா தீய செயல்ககளையும் நினைத்து அவர் மிகவும் வருந்துகிறார். அங்கு அவர் ஃபெரைடு என்ற ஒரு பெண்ணை சந்திக்கின்றார். அவளிடம் அவள் பேரனைப் பார்த்துக்கொள்ளும்படி கேட்கிறான். ரெய்ஹானின் மரணம் மற்றும் அவனுடைய பேரனுக்கு தாய் இல்லை என்று யாவிதன் அவளிடம் கூறும்போது, ​​அவனுக்காக ஒரு தாயாக இருக்கும்படி ஃபெரைடை கேட்கிறாள் ஆனால் தன்னால் முடியாது என்று அவள் மறுக்கிறாள். ஆனால் அவளுடைய சகோதரனின் சிகிச்சைக்காக பணம் தேவை, அதனால் யாவிதன் அவளுக்கு பணம் கொடுக்கிறாள், அதனால் அவள் பேரனுக்கு ஒரு தாயாக இருப்பேன் என்று ஃபெரைடு சத்தியம் செய்கிறாள், ஆனால் அவள் அவர்களின் வீட்டிற்கு வரும்போது அவள் எமிரால் மோசமாக நடத்தப்படுகிறாள்.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இவர்களின் வாழ்க்கை பல பிரச்சனைகளுடன் செல்கிறது. பல பிரசனைகளிக்கான தீர்வுகளை பெற்று விட்டு முதல் முறையாக ரெய்ஹானின் கல்லறைக்குச் சென்ற எமிரை சுட்டுக் கொல்லப்படுகிறார். ஃபெரைட் தர்ஹூன்ன் குடும்பத்திற்கு விடைபெற்று விட்டு செல்கிறார். இத்துடன் இந்த பருவம் முடிவடைகிறது.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரங்கள் தொகு

  • ஓஸ்கே யாகிசு - ரெய்ஹான் தர்ஹூன் (1-245)
    • நடுத்தர குடும்பத்தை சேர்ந்த் கிராமத்தை சேர்ந்த மன வலிமை கொண்ட பெண். ஹிக்மேட்டின் தங்கையின் மகள், எமிரின் மனைவி. (இரண்டாம் பருவத்தில் இறந்து விட்டார்)
  • கோக்பெர்க் திமிர்சி[4] - எமிர் தர்ஹூன் (1-350)
    • ஹிக்மேட்டின் மூத்த மகன், முன்கோபம் கொண்டவன். ரெய்ஹானின் கணவன். (மூன்றாம் பருவத்தில் இறந்து விட்டார்)
  • ஜான்சு துமன்[5] - ஃபெரைடு (246-350)
    • ரெய்ஹான் மற்றும் எமிரின் குழந்தையை பார்த்துக் கொள்பவர்.
  • கேன் வேரில் - கெமல் தர்ஹூன் (1-350)
    • ஹிக்மேட்டின் தம்பி, திருமணமாகி மனைவி இறந்த பிறகு தனது ஒரே மகளான மசால் உடன் வசித்து வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞர், யக்மூர் சஹ்பசோவாவின் கணவர்.
  • யக்மூர் சஹ்பசோவா - நாரின் தர்ஹூன் (71-350)
    • வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக துருக்கியில் தங்கி இருப்பவர், குடுயுறுமைக்காக கெமல்லை திருமணம் செய்கின்றார். ரெய்ஹானாவின் சிறந்த தோழி மற்றும் மிகவும் தையிரியமானவர்.

எமிரின் குடும்ப பின்னணி தொகு

  • பெர்கன்ட் மாஃப்ட்லர் - ஹிக்மெட் தர்ஹூன் (தந்தை) (1-336)
  • குல் ஆர்சன் - யாவிதன் தர்ஹூன் (தாய்)
    • பணக்கார திமிர் பிடித்தவர், ரெய்ஹான் மற்றும் எமிரை பிரித்து செம்ரேவே திருமணம் செய்து வைக்க நினைக்கின்றார்.
  • சில துர்கோளு - சுனா தர்ஹூன் (தங்கை)
  • யான்சின் மினா - மசால் தர்ஹூன் (தங்கை)

துணைக் கதாபாத்திரங்கள் தொகு

  • செய்டா ஓல்குனர் - செம்ரே
    • எமிரின் நண்பி, எமிரை காதலிக்கிறாள், ரெய்ஹான் மற்றும் எமிரை பிரிக்க பல சதி செய்கிறாள்.
  • முனிஸ் ஒஸ்லெம் - லைலா (1-70)
  • அலி டெரெலி - சபர்
  • துகே எர்சோய் - சுஹெய்லா
  • முஸ்தபா சிம்செக் - தலாஸ்

பருவங்கள் தொகு

ஆண்டு ஒளிபரப்பு அத்தியாயங்கள் அலைவரிசை
2019 18 பிப்ரவரி - 31 மே 2019 70 (1-70) கனால் 7
2019-2020 9 செப்டம்பர் 2019 - 8 மே 2020 175 (71-245) கனால் 7
2020-2021 7 செப்டம்பர் 2020 - 27 ஜூன் 2021 105 (246-350) கனால் 7

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு