கனால் 7
கனால் 7 (Kanal 7) என்பது 1994 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு துருக்கிய நாட்டு தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இது ஒரு நிலப்பரப்பு ஒளிபரப்பு உரிமத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த தொலைக்காட்சி செயற்கைக்கோள் வழியாக துருக்கி முழுவதும் கிடைக்கிறது. இந்த தொலைக்காட்சியில் நாடகத் தொடர்கள், நேர்காணல், சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் சமயம் சார்ந்த பல வகை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றது. கனால் 7 என்பது தமிழில் அலைவரிசை 7 என்பதே அர்த்தம் ஆகும்.
கனால் 7 | |
---|---|
தொடக்கம் | 27 சூலை 1994 14 செப்டம்பர் 2014 (HD) | (SD)
உரிமையாளர் | யிம்பாஸ் ஹோல்டிங் கோச் ஹோல்டிங் டோகன் ஹோல்டிங் வயாகாம் சிபிஎஸ் |
சுலோகம் | 'கனால் 7 அனைத்து வண்ணங்களும்' 'துருக்கிய குடியரசின் அலைவரிசை' |
நாடு | துருக்கி |
மொழி | துருக்கியம் |
இணை நிறுவனங்கள் | வானொலி 7 |
இணையதளம் | Website of Kanal 7 Mepayhiz Holding |
இந்த தொலைக்காட்சியில் இந்திய நாட்டு இந்தி மொழித் தொடர்களான இது காதலா?, அலைபாயுதே, என் கணவன் என் தோழன், காதலுக்கு சலாம், சிந்து பைரவி, மதுபாலா, குங்கும் பாக்யா[1][2] மற்றும் கொரியன் மொழித் தொடர்களான மூண் எம்பிரசிங் தி சன், மூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ் போன்ற பல தொடர்கள் மொழி ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.