என் கணவன் என் தோழன்

என் கணவன் என் தோழன் என்பது அக்டோபர் 29, 2012 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொடர் ஆகும். இது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தியா ஓர் பாதீ ஹம்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். தொடர்ந்து ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இத்தொடரை திடீரென விஜய் தொலைக்காட்சி பாதியிலேயே நிறுத்திவிட்டது. பல மொழிகளில் பல நாடுகளில் ஒளிபரப்பாகும் இத்தொடரை உலகம் முழுவதும் 148 மில்லியன் மக்கள் காண்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[1]

என் கணவன் என் தோழன்
வகைகுடுப்பம்
காதல்
நகைச்சுவை நாடகம்
உருவாக்கம்சசி சுமித் புரொடக்சன்ஸ்
எழுத்துசசி மிட்டல்
சீமா மந்திரி
ரகுவீர் ஷெகாவத்
இயக்கம்சுமித் எச் மிட்டல்
ரோஹித் ராஜ் கோயல்
நடிப்புஅனஸ் ரஷீத்
தீபிகா சிங்
நெயில் பட்
நீலு வகேலா
அசோக் லோகஹன்டே

கெளதம் குலாத்தி
கனிகா மகேஷ்வரி
வருண் ஜெயின்
பூஜா சிங்
செஹரிஷ் அலி

ஆரிய சர்மா
ராஷ்மி பிற்ரே
ராகினி ஷா
முகப்பு இசைசுபா முட்கல்
கைலாசு கேர்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
தமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்இந்தி : 1,487
தமிழ் : 927
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சசி மிட்டல்
சுமித் எச் மிட்டல்
படப்பிடிப்பு தளங்கள்புஷ்கர்
அஜ்மீர்
சிங்கப்பூர்
தில்லி
கர்னால்
தயாரிப்பு நிறுவனங்கள்சசி சுமித் புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி (தமிழ்)
ஸ்டார் பிளஸ் (இந்தி)
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்29 அக்டோபர் 2012 –
08 மார்ச் 2017
வெளியிணைப்புகள்
Official website

இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 29, 2011 முதல் செப்டம்பர் 10, 2016 வரை ஒளிபரப்பாகி 1,487 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்

தொகு

சந்தியா என்பவர் தன் தந்தையின் தூண்டுதலால் சிறுவயதில் இருந்தே ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். அவருக்கு சூர்யா என்ற இனிப்புக் கடைக்காரருடன் திருமணம் நடந்தது. சூர்யாவின் குடும்பம் பாரம்பரியம் மிக்க குடும்பமாக இருந்ததால் தன் கனவு உடைந்துவிட்டதாக எண்ணி சந்தியா வருத்தப்பட்டார். பிறகு அவரது கனவை அறியும் சூர்யா அவருக்கு உறுதுணையாக இருந்தார். சூர்யாவின் அம்மா சரோஜா சந்தியாவின் கனவை முதலில் எதிர்த்தார். பிறகு மனம் மாறி அவரை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். பல தடைகளைக் கடந்து காவலர் பயிற்சியில் வெற்றி பெற்ற சந்தியா கோப்பை வென்றார். இதனால் அவருக்கு சொந்த ஊரிலேயே ஏ.எஸ்.பி. வேலை கிடைத்தது. அவர் தன் பணியை திறம்படச் செய்து வந்தார். அவரது எதிரிகள் மூலம் சந்தியாவின் குடும்பத்திற்கு துன்பங்கள் வந்தன. ஆனால் சந்தியா அவற்றை முறியடித்தார். பிறகு அவருக்கு விநாயக் மற்றும் வினித் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் வினித்தை சந்தியா தன் அண்ணியிடம் கொடுக்க வேண்டிய சூழல் உருவானது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு விநாயக் மற்றும் வினித் ஆகிய இருவரும் வளர்ந்து இருந்தனர். விநாயக் தன் அப்பா ஒரு இனிப்பு கடைக்காரர் என்று சொல்ல பிடிக்கவில்லை. இதனால் சூர்யா ஒரு உணவகம் கட்ட முடிவெடுக்கிறார். அதற்கான பணம் பெறுவதற்காக கபடி விளையாட்டில் கலந்து கொள்கிறார். அதில் அவரது அணி வெற்றி பெறுகிறது.

நடிகர்கள்

தொகு

முக்கிய கதாபாத்திரங்கள்

தொகு

துணை கதாபாத்திரங்கள்

தொகு
  • நீலு வகேலா- சரோஜா அருண் ராடீ
  • அசோக் லோகன்டே- அருண் ராடீ
  • கெளதம் குலாத்தி- விக்ரம் அருண் ராடீ
  • கனிகா மகேஷ்வரி- மீனாட்சி விக்ரம் ராடீ
  • வருண் ஜெயின்- மோகன் அருண் ராடீ
  • பூஜா சிங்- ப்ரீத்தி மோகன் ராடீ
  • செஹரிஷ் அலி- சவிதா அருண் ராடீ/சவிதா திலீப்
  • சபரி சந்த்ரன்- திலீப்
  • ப்ரீத்தி சௌத்ரி- கவிதா
  • நெயில் பட்- சாகீர் சித்திக்
  • ஆரிய சர்மா- சோட்டு
  • ராஷ்மி பிற்ரே- கஸ்தூரி
  • ராகினி ஷா- ஊர்மிளா(சரோஜாவின் அண்டைவீட்டுப் பெண்)

பிற இந்திய மொழிகளில்

தொகு

இது ஒரு ஹிந்தி மொழி தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ஈ தாரம் இல்லாலு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இத்தொடரை மறுதயாரிப்பு செய்த கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் மொழித் தொலைக்காட்சிகள் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டன. ஆனால் மலையாளம் மொழியில் பரஸ்பரம் என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்ட இத்தொடர் புகழ்பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

பிற வெளி நாடுகளில்

தொகு

இத்தொடர் இலங்கை நாட்டில் சிங்கள மொழியி்ல் ஸ்வப்னா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வியட்நாம், சிலோவாக்கியா மற்றும் ஜமாய்க்கா போன்ற நாடுகளில் அவரவர் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. மேலும் உருமேனியா, பல்காரியா, உகாண்டா, ரஷ்யா, தஜிகிஸ்தான், மகடோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வசன வரிகளில் ஒளிபரப்பாகிறது.[2]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு

ஸ்டார் பரிவார் விருதுகள்

தொகு
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2012 சிறந்த புதுமுக நடிகை தீபிகா சிங் வெற்றி
2012 சிறந்த மருமகள் தீபிகா சிங் வெற்றி
2012 சிறந்த நகைச்சுவை முகம் கனிகா மகேஷ்வரி வெற்றி
2012 சிறந்த மனைவி தீபிகா சிங் பரிந்துரை
2012 சிறந்த ஜோடி அனஸ் ரஷீத்-தீபிகா சிங் பரிந்துரை
2013 சிறந்த கணவர் அனஸ் ரஷீத் வெற்றி
2013 சிறந்த மருமகள் தீபிகா சீங் வெற்றி
2013 சிறந்த மாமனார் அசோக் லோகண்டே வெற்றி
2013 சிறந்த ஜோடி அனஸ் ரஷீத்-தீபிகா சிங் பரிந்துரை
2014 சிறந்த கணவர் அனஸ் ரஷீத் வெற்றி
2014 சிறந்த மருமகள் தீபிகா சீங் வெற்றி
2014 சிறந்த நகைச்சுவை நடிகை கனிகா மகேஷ்வரி வெற்றி
2014 சிறந்த மாமியார் நீலு வகேலா வெற்றி
2015 சிறந்த மனைவி தீபிகா சிங் வெற்றி
2015 சிறந்த மகன் அனஸ் ரஷீத் வெற்றி
2015 சிறந்த மாமியார் நீலு வகேலா வெற்றி

இந்தியன் டெலிவிஷன் அகடமி விருதுகள்[3]

தொகு
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2013 சிறந்த நடிகர் அனஸ் ரஷீத் வெற்றி
2013 சிறந்த துணை நடிகை நீலு வகேலா வெற்றி
2013 சிறந்த இயக்குநர் ரோஹித் ராஜ் கோயல் வெற்றி
2013 சிறந்த எழுத்தாளர் சீமா மந்த்ரி வெற்றி
2013 சிறந்த வசன எழுத்தாளர் ரகுவீர் ஷெகாவாத் வெற்றி
2014 சிறந்த துணை நடிகை நீலு வகேலா வெற்றி
2014 சிறந்த தொடர் தியா ஓர் பாதீ ஹம் வெற்றி
2014 சிறந்த நடிகை தீபிகா சிங் வெற்றி

இந்தியன் டெல்லி விருதுகள்[4]

தொகு
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2012 சிறந்த தொடர் தியா ஓர் பாதீ ஹம் வெற்றி
2012 சிறந்த முகப்பு படம் தியா ஓர் பாதீ ஹம் வெற்றி
2012 சிறந்த எதிர்மறை நடிகை கனிகா மகேஷ்வரி வெற்றி
2012 சிறந்த நடிகர் அனஸ் ரஷீத் பரிந்துரை
2012 சிறந்த புதுமுக நடிகை தீபிகா சிங் பரிந்துரை
2012 சிறந்த துணை நடிகை நீலு வகேலா பரிந்துரை
2012 சிறந்த ஜோடி அனஸ் ரஷீத்-தீபிகா சிங் பரிந்துரை
2012 சிறந்த சிறுவயது நடிகர் ஆர்யன் ஷர்மா பரிந்துரை
2012 சிறந்த சமூக செய்தி கொண்ட தொடர் தியா ஓர் பாதீ ஹம் பரிந்துரை
2013 சிறந்த துணை நடிகை நீலு வகேலா பரிந்துரை
2013 சிறந்த தொடர் தியா ஓர் பாதீ ஹம் வெற்றி
2013 சிறந்த நடிகர் அனஸ் ரஷீத் வெற்றி
2013 சிறந்த நடிகை தீபிகா சிங் வெற்றி
2013 சிறந்த துணை நடிகை நீலு வகேலா பரிந்துரை
2013 சிறந்த நகைச்சுவை நடிகை கனிகா மகேஷ்வரி பரிந்துரை
2013 சிறந்த ஜோடி அனஸ் ரஷீத்-தீபிகா சிங் பரிந்துரை
2014 சிறந்த தொடர் தியா ஓர் பாதீ ஹம் வெற்றி
2014 சிறந்த நடிகர் அனஸ் ரஷீத் பரிந்துரை
2014 சிறந்த நடிகை தீபிகா சிங் பரிந்துரை
2014 சிறந்த ஜோடி அனஸ் ரஷீத்-தீபிகா சிங் பரிந்துரை
2014 சிறந்த துணை நடிகை நீலு வகேலா பரிந்துரை
2014 சிறந்த துணை நகைச்சுவை நடிகை கனிகா மகேஷ்வரி பரிந்துரை
2014 சிறந்த துணை நகைச்சுவை நடிகர் கவுதம் குலாத்தி பரிந்துரை
2015 சிறந்த நடிகர் அனஸ் ரஷீத் பரிந்துரை
2015 சிறந்த நடிகை தீபிகா சிங் பரிந்துரை
2015 சிறந்த ஜோடி அனஸ் ரஷீத்-தீபிகா சிங் பரிந்துரை

நடுவர் விருதுகள்

தொகு
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2012 சிறந்த நாடகம் தியா ஓர் பாதீ ஹம் பரிந்துரை
2013 சிறந்த துணை நடிகை நீலு வகேலா வெற்றி
2013 சிறந்த நகைச்சுவை நடிகை கனிகா மகேஷ்வரி பரிந்துரை
2014 சிறந்த துணை நகைச்சுவை நடிகர் கவுதம் குலாத்தி பரிந்துரை

தொழில்நுட்ப விருதுகள்

தொகு
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2012 சிறந்த பாடகர் கைலாஷ் கேர்&சுபா முட்கல் வெற்றி
2013 சிறந்த ஒப்பனையாளர் கிருஷ்ண கோபால் ராஜ்பூர் வெற்றி

போரோப்ளஸ் கோல்ட் விருதுகள்

தொகு
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2012 சிறந்த புதுமுக நடிகை தீபிகா சிங் வெற்றி
2012 சிறந்த எதிர்மறை நடிகை கனிகா மகேஷ்வரி வெற்றி
2013 சிறந்த நடிகை தீபிகா சிங் வெற்றி
2013 சிறந்த எதிர்மறை நடிகை கனிகா மகேஷ்வரி வெற்றி
2013 சிறந்த துணை நடிகை நீலு வகேலா வெற்றி
2014 சிறந்த நடிகை தீபிகா சிங் வெற்றி
2014 சிறந்த துணை நடிகை நீலு வகேலா வெற்றி
2015 சிறந்த துணை நடிகை நீலு வகேலா வெற்றி

மேற்கோள்கள்

தொகு
  1. "En Kanavan En Thozhan - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-05.
  2. "Diya Aur Baati Hum".
  3. "Official ITA Website". Archived from the original on 2011-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
  4. Official Website

இவற்றைப் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_கணவன்_என்_தோழன்&oldid=3546148" இலிருந்து மீள்விக்கப்பட்டது