ஓ ஆர் 10 - 193 - 2 - 13 (ராஜேஸ்வரி) (நெல்)
ஓ ஆர் 10 - 193 - 2 - 13 (ராஜேஸ்வரி) (OR10-193-2-13 (Rajeswari) எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 90 (T-90) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். கடலோர உவர்ப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 80 சென்டிமீட்டர் (80 cm) குள்ளப் பயிராகும். குட்டையான, மற்றும் தடித்த தானியத்தை கொண்டுள்ள இவ்வகை நெற்பயிர், ஒரிசா மாநில கடலோரப் பிராந்தியங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
ஓ ஆர் 10 - 193 - 2 - 13 OR10-193-2-13 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
டி - 90 x ஐ ஆர் - 8 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
வெளியீடு |
1975 |
மாநிலம் |
ஒரிசா |
நாடு |
இந்தியா |
குறிப்பு
தொகு- ஓ ஆர் 10 - 193 - 2 - 13 (ராஜேஸ்வரி) (OR10-193-2-13 (Rajeswari) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 28. OR10-193-2-13 (Rajeswari)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.
{{cite web}}
: horizontal tab character in|title=
at position 41 (help) - ↑ Notified Rice Varieties in Orissa, India