ககந்தன்
ககந்தன் என்பவன் சோழப் பெருவேந்தன் காந்தனுக்கும் அவன் உடல் உறவு கொண்டிருந்த கணிகை ஒருத்திக்கும் பிறந்த மகன். [1] காந்தன் பரசுராமனுக்குப் பயந்து சோழநாட்டை ஆளும் பொறுப்பினை இந்தக் ககந்தனிடம் ஒப்படைத்திருந்தான். [2] இந்தக் கந்கதனின் மகன் மருதி (பார்ப்பினி) என்னும் கற்புடைய பெண்ணை காவிரியில் தனிமையில் நீராடியபோது யாரும் இல்லாதவள் என்று எண்ணித் தன்னோடு உறவாட அழைத்தான். ஏழு நாளுக்குப் பின்னர் இதனை அறிந்த ககந்தன் தன் மகன் காமுகனை வாளால் வெட்டிக் கொன்றான். [3] அத்துடன் விசாகை என்பவளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தன் மூத்த மகனையும் வெட்டிக் கொன்றான். [4] [5]
மேற்கோள்
தொகு- ↑
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யார்என நினைஇ
நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் 30
காவல் கணிகை தனக்குஆம் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம்எனக் காதலின் கூஉய் - ↑
அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசு ராமன்நின் பால்வந்து அணுகான் 35
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு
உள்வரிக் கொண்டுஅவ் உரவோன் பெயர்நாள் 40 - ↑
ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால் 75
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன
இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப்
பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன். 80 - ↑
குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்
அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் 145
படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண்
கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரிஇரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த 150
விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்
தொல்லோர் கூறிய மணம்ஈது ஆம்என
எல்அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங்கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின், 155
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டுஎன, ககந்தன் கேட்டுக்
கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் - ↑ அனத்து மேற்கோள்களும் - மணிமேகலை - 22 சிறைசெய் காதை