மருதி (பார்ப்பினி)
மருதி என்பவளைப் பற்றிய நிகழ்வு மணிமேகலை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருதி என்னும் பார்ப்பினி தனியே நீராடுகையில் பார்த்த ககந்தன் மகன் அவளை யாருமில்லாவள் என்று எண்ணி அவளைத் தன்னுடன் இருக்கும்படி அழைத்தான். கற்புடைய மருதி கலங்கிச் சதுக்கப் பூதம் தெய்வத்திடம் முறையிட்டாள். கணவனை மட்டும் தெய்வம் என்று தொழுபவளே திருக்குறள் கூறுவது பொல மழை பொழியச் செய்யும் கற்புடையவள். மருதி பிற தெய்வங்களையும் வணங்குபவள் ஆதலால் அவள் கோரிக்கையை ஏற்றுக் குற்றவாளியைத் தண்டிக்க முடியாது என்று கூறிவிட்டது. எனினும் மருதி கற்புடையவள் ஆதலால் குற்றவாளி தண்டிக்கப்படுவான் என்று மருதிக்கு ஆறுதல் கூறியது. அந்தத் தெய்வம் கூறியபடி அந்த நிகழ்விலிருந்து ஏழாம் நாள் அவனது தந்தையும், அப்போது சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினைக் காந்தன் என்னும் சோழ வேந்தனிடம் பெற்றிருந்தவனுமான ககந்தன் கை வாளால் வெட்டிக் கொல்லப்பட்டான்.[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9]
மேற்கோள்
தொகு- ↑ வரும் மேற்கோள்கள் மணிமேகலை 22 சிறைசெய் காதை பகுதியில் உள்ளவை
- ↑ மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக் கன்னி ஏவலின் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யார்என நினைஇ நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் 30 காவல் கணிகை தனக்குஆம் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் ககந்தன் ஆம்எனக் காதலின் கூஉய்
- ↑ அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின் பரசு ராமன்நின் பால்வந்து அணுகான் 35 அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி என்றே இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு உள்வரிக் கொண்டுஅவ் உரவோன் பெயர்நாள் 40
- ↑ தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம் பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின் யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக் காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீவா என்ன, நேர்இழை கலங்கி 45
- ↑ மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர் புக்கேன் பிறன்உளம் புரிநூல் மார்பன் முத்தீப் பேணும் முறைஎனக்கு இல்என மாதுயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் 50
- ↑ பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இலேன் கண்டோன் நெஞ்சில் கரப்புஎளி தாயினேன் யான்செய் குற்றம் யான்அறி கில்லேன் 55 பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீஎனச் சேயிழை அரற்றலும்,
- ↑ மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி நீகேள் என்றே நேர்இழைக்கு உரைக்கும்:
- ↑ தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் 60 பெய்எனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய் பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுள் பேணல் கடவியை ஆகலின் 65 மடவரல் ஏவ மழையும் பெய்யாது நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை ஆங்குஅவை ஒழிகுவை ஆயின் ஆயிழை ஓங்குஇரு வானத்து மழையும்நின் மொழியது 70 பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக் கட்டாது உன்னைஎன் கடுந்தொழில் பாசம்
- ↑ மன்முறை எழுநாள் வைத்துஅவன் வழூஉம் பின்முறை அல்லது என்முறை இல்லை ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால் 75 வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப் பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன் தாதை வாளால் தடியவும் பட்டனன். 80