ககோன் பீபி
நூர்ஜஹான் காகோன் பிபி (Noorjahan Kakon Bibi)[1][2] வங்காளதேசத்தைச் சுதந்திரப் போராளியவார் .[4] 1971இல் கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில் இரகசிய உளவாளியாக செயல்பட்டார். இவர் பாக்கித்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். பாக்கித்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அவர்களால் பல கொடுமைகள் அனுபவித்தார். 1996 ஆம் ஆண்டு வங்காள தேசத்தால் வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இரு பெண் சுதந்திர போராட்ட வீரர்களில் ககோன் பிபி ஒருவர் ஆவார். இவர் வங்காளதேச விடுதலைப் போரில் தன் துணிச்சலான பங்களிப்பு மூலம் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதற்காக இந்த பதக்கத்தை பெற்றார்.[5][6][7]
ககோன் பீபி | |
---|---|
தாய்மொழியில் பெயர் | কাঁকন বিবি |
பிறப்பு | ககேத் ஹஞ்சியாடா 1915 (சரிபார்க்கப்படவில்லை)[1] மற்ற தரவுகளின் மூலம் 1927/28[2] அல்லது 1931/32[3] மேகாலயா, இந்தியா |
இறப்பு | 21 மார்ச்சு 2018 (age uncertain) |
தேசியம் | வங்காளதேச்த்தவர் |
விருதுகள் | வீரதீர பதக்கம் (பீர் பரோதிக்) |
இராணுவப் பணி | |
சார்பு | வங்காளதேசம் |
Alliance | முக்தி வாகினி |
Service year | 1971 |
போர்கள்/யுத்தங்கள் | வங்காளதேச விடுதலைப் போர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநூர்ஜஹான் ககோன் பீபி (முதலில் ககேத் ஹென்னியாடா, ககேத் ஹஞ்சியாடா என அறியப்பட்டார்) இந்தியாவின் மேகாலயாவில், நயிரை காசியா பல்லியில் உள்ள காசி குடும்பத்தில் பிறந்தார். இவர்,1970இல் திராய் கிராமத்தைச் சேர்ந்த சாகித் அலி என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, இவரது பெயர் நூர்ஜஹான் பேகம் என்று மாற்றப்பட்டது. ஆனால் இவர் பெரும்பாலும் ககோன் பீபி என அறியப்பட்டார். இவர் 16 மார்ச் 1971 அன்று சகினா என்ற மகளை பெற்றெடுத்தார். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடு காரணமாக, இவரது கணவர் அதிருப்தி அடைந்தார். இதன் காரணமாக இவர்கள் பிரிந்தனர். பின்னர் இவர் அப்துல் மஜித் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு என்ற ஒரு மகன் பிறந்தான். இவரது கணவர் மஜித் வங்காளதேச எல்லைக் காவல் முகாமில் பணி செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்.[8] இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முதல் மகன் சகினாவை தன் முந்தைய வீட்டிலிருந்து அழைத்து வந்தார். திரும்பி வந்த பிறகு, இவரது கணவனைக் காணவில்லை. மஜீத், தோவராபஜார் உபாசிலாவின் முகாமுக்கு மாற்றப்பட்டதாக கேள்விப்பட்டு, இவர் அவரைத் தேடி அங்கு சென்றார்.[9]
விடுதலைப் போர்
தொகுககோன், தனது கணவரைத் தேட அங்கு சென்றபோது தோவராபஜார் பகுதியில் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. இவர் தெங்கிராட்டிலா முகாமிற்கு சென்றார். பாக்கித்தானிய இராணுவம் இவரை ஒரு பதுங்கு குழியில் பிடித்தது. இவர் பல நாட்கள் மனிதாபிமானமற்ற உடல் மற்றும் மன சித்திரவதைகளை எதிர்கொண்டார். இவர் தனது கணவரை கண்டுபிடிக்கும் நம்பிக்கையை இழந்து முக்தி வாகினியில் சேர்ந்தார் (வங்காளதேச விடுதலைப் போரின் போது, பாக்கித்தான் இராணுவத்தில் இருந்த வங்காளப் போர் வீரர்கள் மற்றும் படை அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம்). சுதந்திரப் போராட்ட வீரர் இரகமத் அலி இவரை தளபதி மிர் சௌகத் அலிக்கு அறிமுகப்படுத்தினார். சௌகத் காகோன் பீபியை 'மதத்தின் சகோதரி' என்று அழைத்தார். அவரது அறிவுறுத்தலால், இவர் ஒரு பிச்சைக்காரியைப் போல மாறுவேடத்தில் இரகசிய முகவராக வேலை செய்ய ஆரம்பித்தார்.
ஏப்ரல் 1971இல், தோவராபஜார் உபாசிலாவில் உள்ள பங்களா பஜாரில் உளவு பார்த்தபோது ககோன் பீபி ரசாக்கர்களால் பிடிக்கப்பட்டார். சூடான இரும்பு கம்பியால் எரிப்பது உட்பட அவர்கள் இவரை மிகவும் கொடுமைப்படுத்தினர். பாலியல் சித்திரவதையும் தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர், அவர்கள் இவரை தெங்கிராட்டிலாவில் உள்ள பாக்கித்தான் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இவர் பாக்கித்தான் ராணுவ தளபதியிடம், தான் பாக்கித்தான் சிப்பாய் அப்துல் மஜித்தான் வந்ததாகவும் கூறினார். பாக்கித்தான் தளபதியும் இவரை நம்பினார். மாறாக, அவள் பாக்கித்தானியர்களுக்காக உளவுவேலை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டாள். இவரும் ஒப்புக்கொண்டு, சுதந்திரப் போராளிகளுக்கு மிகவும் பயனுள்ள வழியில் தகவல்களை வழங்க உதவினார். இது முதன்மையாக பாக்கித்தான் தளபதியிடமிருந்து அடையாள அட்டையைப் பெறுவதன் மூலம் அடையப்பட்டது. அந்த அடையாள அட்டையுடன் இவர்அடிக்கடியும் மிக எளிதாகவும் பாக்கித்தானிய முகாமுக்கு செல்லத் தொடங்கினார். மேலும், சுதந்திரப் போராளிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கினார்.
பின்னர் ககோன் கிட்டத்தட்ட 20 போர்க்களங்களில் பங்கேற்றார்.[6] நவம்பரில், இவர் தெங்கிராட்டிலாவில் ஒரு முன்களப் போரில் ஈடுபட்டார். அதில் இவர் பலத்த காயமடைந்தார். இவர் இறக்கும் வரை காயத்தின் அடையாளங்கள் இவரது முழங்காலில் தெரிந்தது.
இறப்பு
தொகுககோன் பீபி மாரடைப்பால் 2017 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 21 மார்ச் 2018 அன்று இறந்தார். அவள் இறக்கும் போது, காகோன் பீபியின் வயதை கனிக்க முடியவில்லை. அறிக்கைகள் 85[3] அல்லது 90[2] முதல் 103 வயது வரை இருக்கு எனக் கூறுகிறது.[10]
மேற்கோளகள்
தொகு- ↑ 1.0 1.1 "Bir Protik Kakon Bibi dies". Risingbd.com. 22 March 2018 இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322143321/http://m.risingbd.com/english/national/news/52564/Bir-Protik-Kakon-Bibi-dies.
- ↑ 2.0 2.1 2.2 "Kakon Bibi laid to rest". The Daily Star. 23 March 2018. http://www.thedailystar.net/city/kakon-bibi-laid-rest-1552180.
- ↑ 3.0 3.1 "Tale of Legendary Freedom Fighter Kakon Bibi". 26 January 2017. Archived from the original on 22 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.
- ↑ "Bangladesh War Liberation hero Bir Protik Kakon Bibi dies". 22 March 2018. https://bdnews24.com/bangladesh/2018/03/22/bangladesh-liberation-war-hero-bir-pratik-kakon-bibi-dies.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Manab Zamin. 13 December 2012 இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322143124/http://www.mzamin.com/details.php?mzamin=NTQzMzE=.
- ↑ 6.0 6.1 "Constitutional recognition of indigenous people demanded". The Daily Star (Bangladesh). 29 June 2009. http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=94844.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Janakantha. 27 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304235731/http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759.
- ↑ Manab Zamin. 13 December 2012.গুপ্তচর কাকন বিবি பரணிடப்பட்டது 2018-03-22 at the வந்தவழி இயந்திரம் [Spy Kakon Bibi]. Manab Zamin (in Bengali). 13 December 2012. Retrieved 22 March 2018.
- ↑ Jugantor. 16 December 2014.
- ↑ (in bn)Ekushey Television. 22 March 2018. http://www.ekushey-tv.com/বীর-মুক্তিযোদ্ধা-কাঁকন-বিবি-আর-নেই/30353.